முகப்பு
செய்திகள்

ஜெயம் ரவியின் ‘அகிலன்’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு

கல்யாண கிருஷ்ணன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்துள்ள அகிலன் படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:34 AM
பகிர்:

கல்யாண கிருஷ்ணன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்துள்ள அகிலன் படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

பூலோகம் படத்துக்கு பிறகு இயக்குநர் கல்யாண கிருஷ்ணனுடன் ஜெயம் ரவி இணைந்திருக்கும் படம் அகிலன். இந்தப் படத்தை ஸ்கிரீன் சீன் மீடியா எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. 

இந்தப் படத்தில் தான்யா, பிரியா பவானி ஷங்கர் உள்ளிட்டோர் நாயகிகளாக நடித்துள்ளனர். சாம் சிஎஸ் இசையமைத்துள்ள இந்தப் படத்துக்கு விவேக் ஆனந்த் ஒளிப்பதிவு செய்துள்ளார். 

இந்நிலையில், இப்படம் மார்ச் 10 ஆம் தேதி திரைக்கு வர உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.