செய்திகள்

பிரபல மலையாள தொகுப்பாளினி சுபி சுரேஷ் காலமானர்!

பிரபல மலையாள நடிகையும், தொலைக்காட்சி தொகுப்பாளினியுமான சுபி சுரேஷ்(42) உடல்நலக் குறைவால் இன்று காலமானார். 

DIN

பிரபல மலையாள நடிகையும், தொலைக்காட்சி தொகுப்பாளினியுமான சுபி சுரேஷ்(42) உடல்நலக் குறைவால் இன்று காலமானார். 

சுபி சுரேஷ் நகைச்சுவை நடிகராக அறிமுகமானார். தொடர்ந்து ஒரு சில மலையாளப் படங்களில் குணச்சித்திர வேடத்திலும் நடித்துள்ளார்.

சின்னதிரையில் தொகுப்பாளினியாக இருந்து வெள்ளித்திரையில் நகைச்சுவை நடிகையாகப் பயணித்தவர். நகைச்சுவையுடன் இவர் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குவது ஏராளமானோரின் கவனத்தை ஈர்த்தது. 

அவரின் நகைச்சுவைக்கென்று தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. அதன்மூலம் சுபி சுரேஸுக்கு சினிமாவில் வாய்ப்புகள் கிடைத்தன. 

2006-ம் ஆண்டு இயக்குனர் ராஜசேனன் இயக்கத்தில் உருவான கனக சிம்ஹாசனம் திரைப்படத்தின் மூலம் சினிமாவில் தனது என்ட்ரியை பதிவு செய்தார். 

அதைத்தொடர்ந்து பஞ்சவர்ண தந்தை, ஆண்குட்டி, ட்ராமா என 20-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். 

எர்ணாகுளம், திரிபுனித்துராவில் பிறந்த இவர் சினிமாலா என்று நகைச்சுவைத் தொடரின் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமானார். 

சமீப காலமாக கல்லீரல் பிரச்னையால் அவதிப்பட்டு வந்த நிலையில், ஆலுவாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதையடுத்து கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்தார்.

நகைச்சுவை நடிகை சுபி சுரேஷ் மறைவு மலையாள திரையுலகத்தினர் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மதுராந்தகத்தில் 2,000 ஏக்கரில் புதிய சர்வதேச நகரம்! மாஸ்டர் பிளான் தயாரிக்க டெண்டர்!

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து குறைந்தது

தமிழினத்தின் எழுச்சிக்கான பகுத்தறிவுப் பேரொளி பெரியார்! - முதல்வர் ஸ்டாலின் புகழாரம்

மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் கூண்டோடு இடமாற்றம்

புதிய பொறுப்பு காத்திருக்கிறது இவர்களுக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT