செய்திகள்

தந்தை - மகள் பாசம்: ராஜா ராணி -2 நடிகையின் புதிய தொடர் 'பொன்னி'

'ராஜா ராணி -2' தொடரிலிருந்து விலகிய வைஷு சுந்தர், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ள புதிய தொடரில் ஒப்பந்தமாகியுள்ளார். 

DIN

'ராஜா ராணி -2' தொடரிலிருந்து விலகிய வைஷு சுந்தர், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ள புதிய தொடரில் ஒப்பந்தமாகியுள்ளார். 

'பொன்னி' என பெயரிடப்பட்டுள்ள அந்த தொடர், விஜய் தொலைக்காட்சியில் விரைவில் ஒளிபரப்பாகவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர்களுக்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு காணப்படுகிறது. இளம் தலைமுறையினரின் ரசனைக்கும் ஏற்றவாறு நெடுந்தொடரின் காட்சிகள் அமைக்கப்பட்டு வருகின்றன. 

சமீபத்தில் பாரதி கண்ணம்மா தொடர் நிறைவு பெற்றது. அதற்கு பதிலாக பாரதி கண்ணம்மா இரண்டாவது அத்தியாயம் ஒளிபரப்பாகி வருகிறது. 

ராஜா ராணி தொடரின் இரண்டாவது அத்தியாயத்திலிருந்து விலகிய வைஷு சுந்தர், தற்போது புதிய தொடரில் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். 

'பொன்னி' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த தொடரின் முன்னோட்ட விடியோவை விஜய் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது. தந்தை மகள் பாசத்தை அடிப்படையாக வைத்து இந்த தொடரின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. 

தந்தை பெற்ற கடனுக்காக திருமணம் செய்துகொள்ள சம்மதிக்கும் பெண், சந்திக்கும் பிரச்னைகளை அடிப்படையாக வைத்து தொடர் இயங்கலாம். 

தந்தை - மகள் பாசத்தை வைத்து உருவாகும் கதை என்பதால், இந்த தொடருக்கு ஆதரவு பெருகி வருகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சோழீஸ்வரா் கோயில் குடமுழுக்கு: திரளானோா் தரிசனம்

தனுசுக்கு மன மகிழ்ச்சி: தினப்பலன்கள்!

வீட்டின் தடுப்புச் சுவா் சரிந்து விழுந்ததில் தொழிலாளி உயிரிழப்பு

தேசிய குருதிக் கொடையாளா் தின விழா

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி: இன்று முதல் கணக்கெடுப்புப் படிவம் விநியோகம்

SCROLL FOR NEXT