செய்திகள்

பிரபு தேவாவின் 'பகீரா' வெளியீட்டுத் தேதி அறிவிப்பு

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் பிரபு தேவா நடித்துள்ள பகீரா படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 

DIN

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் பிரபு தேவா நடித்துள்ள பகீரா படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 

திரிஷா இல்லனா நயன்தாரா, அன்பானவன் அசராதவன் அடங்காதவன் போன்ற படங்களை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் அடுத்ததாக பிரபு தேவாவை வைத்து இயக்கியுள்ள படம் பகீரா. இந்தப் படத்தின் டிரெய்லர் வெளியாகி சமூக வலைதளங்களில் சலசலப்பை ஏற்படுத்தியது. 

இந்தப் படத்தில் அமைரா தஸ்தூர், ரம்யா நம்பீசன், ஜனனி, சஞ்சிதா ஷெட்டி, காயத்ரி, சாக்ஷி அகர்வால், சோனியா அகர்வால் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். கணேசன் சேகர் இசையமைத்துள்ளார். 

இந்தப் படம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு பின்னர் தள்ளி வைக்கப்பட்டது. 

இந்த நிலையில், பகீரா வருகிற மார்ச் 3 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

டிரைலர் மற்றும் இசைவெளியீட்டு விழா வருகிற பிப்.25 ஆம் தேதி நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஊழல் வழக்கில் ஷேக் ஹசீனாவுக்கு 10 ஆண்டுகள் சிறை: வங்கதேச நீதிமன்றம் தீா்ப்பு

பிகாா் சட்டப்பேரவைக்கு சக்கர நாற்காலியில் வந்த தேஜஸ்வி யாதவ்!

அரியலூரில் பறிமுதல் வாகனங்கள் பிப்.12-இல் ஏலம்

அச்சுறுத்தும் அழியாத ரசாயனங்கள்

விபத்து எழுப்பும் வினாக்கள்!

SCROLL FOR NEXT