கோப்புப்படம் 
செய்திகள்

‘லியோ’ படத்தில் லெஜண்ட் சரவணன்? வைரலாகும் காஷ்மீர் புகைப்படங்கள்!

நடிகர் லெஜண்ட் சரவணனின் காஷ்மீர் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

DIN

நடிகர் லெஜண்ட் சரவணனின் காஷ்மீர் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரான லெஜண்ட் சரவணன், முதன்முதலில் தனது நிறுவனத்தின் விளம்பரங்களில் தோன்றி மக்களிடம் பிரபலமடைந்தார்.

இதனைத் தொடர்ந்து, அவரது தயாரிப்பில் ஜேடி - ஜெர்ரி இயக்கத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்த ‘தி லெஜண்ட்’ நடித்து கடந்தாண்டு ஜூலை மாதம் திரையரங்குகளில் வெளியிட்டார்.

இந்நிலையில், காஷ்மீரில் இருக்கும் ஒரு ஹோட்டலில் இருந்து காணொலி ஒன்றை இந்த வாரம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டு ‘காஷ்மீரில் லெஜண்ட்’ எனப் பதிவிட்டிருந்தார்.

இந்த பதிவை தொடர்ந்து, விஜய் நடிக்கும் லியோ படத்தில் சரவணன் நடிக்கவுள்ளதாகவும், படப்பிடிப்புக்காக காஷ்மீரிலுள்ள லியோ படக்குழுவுடன் இணைந்துள்ளதாகவும் இணையத்தில் பலரும் பேசி வந்தனர்.

இந்நிலையில், இன்று காலை காஷ்மீர் பனிப் பொழிவுக்கு மத்தியில் நிற்கும் புகைப்படத்தை பதிவிட்டு விரைவில் சுவாரஸ்யமான தகவலை அளிக்கவுள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.

இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாக தொடங்கியுள்ளன.

எனினும், லியோ படக்குழு அல்லது லெஜண்ட் சரவணன் தரப்பில் இருந்து எந்தவொரு தகவலும் இதுவரை வெளியாகவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மாசாணி அம்மன் கோவிலில் விமலின் புதிய படப் பூஜை!

அறிமுகமானது விவோ ஒய் 400! தள்ளுபடி விலையில் பெறுவது எப்படி?

ஜஸ்பிரித் பும்ராவின் சாதனையை சமன்செய்த முகமது சிராஜ்!

உலோகம், ஆட்டோ துறை பங்குகள் ஏற்றத்தை தொடர்ந்து சென்செக்ஸ், நிஃப்டி உயர்வுடன் நிறைவு!

மாளவிகா மோகனன் பிறந்த நாளில் 3 திரைப்பட போஸ்டர்கள்!

SCROLL FOR NEXT