செய்திகள்

சசிகுமார் நடித்த 'அயோத்தி' படத்தின் 2-ம் பாடல் வெளியீடு!

சசிகுமார் நடிப்பில் உருவாகி வரும் அயோத்தி திரைப்படத்தில் 2வது பாடல் வெளியாகியுள்ளது. 

DIN

சசிகுமார் நடிப்பில் உருவாகி வரும் அயோத்தி திரைப்படத்தின் 2வது பாடல் வெளியாகியுள்ளது. 

ஏற்கெனவே முதல் பாடல் வெளியான நிலையில் தற்போது பிரதீப் குமார் குரலில் இரண்டாவது பாடல் வெளியாகியுள்ளது. கவிஞர் சாரதி பாடல் வரிகளை எழுதியுள்ளார். இசையமைப்பாளர் என்.ஆர். ரகுநந்தன் பாடல்களுக்கு இசைமையத்துள்ளார். 

ராமேஸ்வரத்தை மையமாக வைத்து மதப் பிரச்னைகளைப் பேசும் திரைப்படமாக உருவாகியுள்ள இந்தப் படத்தை மந்திர மூர்த்தி இயக்கியுள்ளார். 

ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் ஆர்.ரவீந்திரன் தயாரிப்பில் உருவான இந்தப் படத்தில் சசிகுமாருடன்  'குக் வித் கோமாளி' புகழ், போஸ் வெங்கட் மற்றும் யஷ்பால் சர்மா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிந்த நிலையில், படத்தொகுப்பு, இசைக்கோர்ப்பு போன்ற பின்னணி பணிகள் நடைபெற்று வருகின்றன.

பிரதீப் குமார் குரலில் காற்றோடு பட்டம் போல... எனத் தொடங்கும் இப்படத்தின் 2வது பாடல் தற்போது (பிப்.24) வெளியாகியுள்ளது. இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் பாடலை வெளியிட்டார். இப்பாடல் வெளியான சிலமணி நேரங்களிலேயே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிகார் தேர்தல் தேதி இன்று அறிவிப்பு!

ரூ.88 ஆயிரத்தைக் கடந்த தங்கம் விலை!

மணலி சிபிசிஎல் ஆலையில் உள்ளூர் மக்களுக்கு வேலை கேட்டு ஆர்ப்பாட்டம்: முன்னாள் எம்எல்ஏ உள்பட 50 பேர் கைது

ராமதாஸுக்கு பயப்படும்படி ஒன்றும் இல்லை; ஐசியுவில் இருப்பதால் சந்திக்கவில்லை: அன்புமணி

மணிப்பூரில் சக்திவாய்ந்த 2 ஐஇடி ரக குண்டுகள் கண்டெடுப்பு

SCROLL FOR NEXT