செய்திகள்

நடுக்காட்டில் அமலா பால்... அருவியின் உச்சிப்பாறையில் ஏறி சாகசம்!

இந்தோனேஷிய காட்டுப்பகுதியில் நண்பர்களுடன் சுற்றுலா சென்றுள்ள நடிகை அமலா பால், அங்குள்ள அருவியில் குளித்து மகிழும் விடியோவைப் பதிவேற்றம் செய்துள்ளார். 

DIN

இந்தோனேஷிய காட்டுப்பகுதிக்கு நண்பர்களுடன் சுற்றுலா சென்றுள்ள நடிகை அமலா பால், அங்குள்ள அருவியில் குளித்து மகிழும் விடியோவைப் பதிவேற்றம் செய்துள்ளார். 

நீச்சல் உடையில் குளிக்கும் அமலாபால், பாறைகளின் மீது ஏறி குதிப்பது, தண்ணீருக்கு நடுவே விழுதுகளில் ஊஞ்சல் ஆடுவது போன்ற சாகசங்களில் ஈடுபடும் விடியோ பலரால் பகிரப்பட்டு வருகிறது.

தமிழ் சினிமாவில் சிந்து சமவெளி படத்துன் மூலம் அறிமுகமான அமலா பால், விஜய், விக்ரம் போன்ற பல முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடித்துள்ளார்.

சமீபத்தில் அமலாபால் நடிப்பில் உருவான கடாவர் திரைப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது. 

தற்போது 31 வயதாகும் அமலாபால், சமூக வலைதளங்களில் தொடர்ந்து ஆக்டிவாக செயல்பட்டு வரும் , பயணங்கள் மேற்கொள்வதிலும் அதிக ஆர்வம் கொண்டவர். 

தற்போது அவர் இந்தோனேஷியாவுக்குச் சென்றுள்ளார். அங்குள்ள பாலி தீவின் காட்டுப்பகுதிக்குச் சென்று அருவியில் நண்பர்களுடன் குளித்துள்ளார். 

இது தொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விடியோ பதிவிட்டுள்ள அவர், கருப்பு நிற நீச்சல் உடையை அணிந்துகொண்டு குளிக்கிறார். பாறைகள் மீது ஏறி குதிப்பது, விழுதுகளில் ஊஞ்சல் கட்டி ஆடுவது போன்ற குறும்புத்தனங்களை அவர் அந்த விடியோவில் பதிவிட்டுள்ளார். இதற்கு ரசிகர்கள் பலர் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தி பாரடைஸ் ஃபர்ஸ்ட் சிங்கிள் விடியோ!

நாளை சென்னை வருகிறார் ஞானேஷ்குமார்?

நல்லகண்ணுவுக்கு அதிதீவிர சிகிச்சை : மருத்துவமனை தகவல்

ஃபர்ஹான் அதிரடி: இங்கிலாந்துக்கு 165 ரன்கள் இலக்கு நிர்ணயித்த பாகிஸ்தான்!

சென்னைக்கு 16 தேர்தல் கண்காணிப்பு அலுவலர்கள் நியமனம்!

SCROLL FOR NEXT