செய்திகள்

'கண்ணான கண்ணே' தொடர் நிறைவுப் பகுதி! ஒளிபரப்பு தேதி, நேரம் அறிவிப்பு!

DIN

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'கண்ணான கண்ணே' தொடர் நிறைவுப் பகுதி ஒளிபரப்பாகும் தேதி மற்றும் நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது. 

சன் தொலைக்காட்சியில் ஏராளமான தொடர்கள் ஒளிபரப்பாகி வருகின்றனர். இதில் பல தொடர்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு காணப்படுகிறது. குறிப்பாக பிரைம் டைம் எனப்படும் மாலை நேரங்களில் ஒளிபரப்பாகும் தொடர்களுக்கு அதிக அளவிலான ரசிகர் பட்டாளம் உள்ளது. 

அந்தவகையில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'கண்ணான கண்ணே' தொடர் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.     
பப்ளூ பிரித்திவிராஜ், நிமிஷிதா, ராகுல் ரவி ஆகியோர் முதன்மை பாத்திரங்களில் நடிக்கின்றனர். 

நிமிஷிதாவுக்கு சமூக வலைதளங்களில் அதிக அளவு ரசிகர்கள் உள்ளதால், இந்த தொடருக்கு இளைய தலைமுறையினரும் ரசிகர்களாக உள்ளனர். 

குடும்பத்தில் பலரின் செல்லப் பெண்ணாக வளரும் மீரா (நிமிஷிதா) தந்தை பாசத்துக்கு ஏங்குகிறார். ஆனால், கணவனாக வரும் ராகுல் ரவி நாயகிக்கு தந்தையின் பாசத்தை அளிக்கிறார். எனினும் தந்தையின் (பிரித்திவிராஜ்) பாசம் அவளுக்கு கிடைத்ததா? அதற்காக என்னென்ன சவால்களை எதிர்கொண்டால் என்பதை அடிப்படையாக வைத்து 'கண்ணான கண்ணே' தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.

இந்தத்தொடருக்கு மகேந்தர், பாரதி கண்ணன் கதை எழுதுகின்றனர். நரசிம்ம மூர்த்தி, நல்லம் ஆகியோர் வசனம் எழுத தனுஷ் இயக்குகிறார்.

தந்தையுடன் நாயகி சேர்ந்துவிட்டதால், இந்தத் தொடர் விரைவில் முடியவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்கு ஏற்ப புதிய தொடர்களும் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளன. 

இந்நிலையில், மார்ச் 4ஆம் தேதி இரவு 8.30 மணிக்கு 'கண்ணான கண்ணே' தொடரின் இறுதி எபிஸோட் ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

'கண்ணான கண்ணே' தொடரின் இறுதிக்காட்சி ஒளிபரப்பாகும் நேரம் அறிவிக்கப்பட்டிருந்தாலும், இந்தத் தொடர் முடியவுள்ளதால் ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

"எதையும் தலைக்கு ஏத்தமாட்டேன்!”: ராகவா லாரன்ஸ் பேட்டி

கொல்கத்தாவிற்கு அதிர்ச்சியளிக்குமா மும்பை?

நம்பிக்கையின் வானவில்...!

திட்டக்குடி அருகே கார் டயர் வெடித்து கார் விபத்து: 3 பேர் பலி

அமித் ஷாவை பிரதமராக்கவே மோடி பிரசாரம்: கேஜரிவால் பேச்சு

SCROLL FOR NEXT