ராஜமௌலியின் அடுத்த படத்தின் பட்ஜெட் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
ராஜமௌலி இயக்கிய ’ஆர்ஆர்ஆர்’ திரைப்படத்தின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து அவர் அடுத்ததாக நடிகர் மகேஷ் பாபுவுடன் இணைந்து புதிய படத்தை இயக்க உள்ளார்.
இந்தப் படம் அயன் பாணியில் உலகம் முழுக்க சுற்றும் இளைஞனின் கதை என முதலில் கூறப்பட்டது. பின்னர், உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு ராஜமௌலி - மகேஷ் பாபு படம் உருவாகவுள்ளதாக ராஜமௌலியின் தந்தை விஜயேந்திர பிரசாத் தெரிவித்திருந்தார்.
இதையும் படிக்க: ’சூர்யா 42’ வெளியீடு எப்போது?
இந்நிலையில், இப்படத்தை மிகப் பிரம்மாண்டமாக நவீன தொழில்நுடப்பத்தில் ரூ.1000 கோடி பட்ஜெட்டில் எடுக்க ராஜமௌலி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.