செய்திகள்

‘தங்கலான்’ பாடல்கள் குறித்து அப்டேட் கூறிய ஜி.வி.பிரகாஷ்! 

இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் ‘தங்கலான்’ பாடல்கள் குறித்து புதிய அப்டேட்டை கூறியுள்ளார். 

DIN

கோலார் தங்க சுரங்கத்தில் தமிழர்கள் பட்ட துயரத்தை அடிப்படையாக வைத்து பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் ‘தங்கலான்’ படம் உருவாகி வருகிறது.

நீண்ட இடைவேளைக்கு பிறகு தமிழில் பார்வதி நடிப்பது அவரது ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்டோரும் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். 

படத்தின் படப்பிடிப்பு தற்போது கே.ஜி.எஃப்பில் நடைபெற்று வருவதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. சமீபத்தில் இந்தப் படத்தில் ஆங்கில நடிகர் டேனியல் கால்டகிரோன் இணைந்துள்ளார். ஆஸ்கர் விருது வென்ற ’தி பியானோ’ திரைப்படத்தில் நடித்தவர்.

இந்நிலையில் படத்தின் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் ஒரு நேர்காணலில், “தங்கலான் படத்தில் 3 பாடல்கள் இதுவரை முடிந்துள்ளது. மூன்றுமே சிறப்பாக வந்துள்ளது. நான் ஏற்கனவே சில சரித்திர படங்களுக்கு இசையமைத்துள்ளேன். இந்திய கிளாசிக் இசைகளை இந்தப் படத்திற்கு பயன்படுத்தியுள்ளேன். டியூன் தயாரானது பாடலாசிரியர்கள் ரஞ்சித்துக்கு அருகாமையிலே இருப்பார்கள். அதனால் அவர்கள் சிறப்பான வரிகளை எழுதி கொடுத்துள்ளனர். படத்தில் அதிகமாக பழங்குடியின மக்களை பற்றிய கருத்துகள் வரும்” எனவும் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிஎம்டபிள்யூ மோட்டராட் இந்தியா விலை உயர்வு அறிவிப்பு!

வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் செய்ய வேண்டியது

தைபேயில் கத்திக் குத்து தாக்குதல்: 9 பேர் காயம்

2025 தேர்தல்கள்: பாஜகவின் அமோக வெற்றியும் காங்கிரஸின் ஆறுதல் வெற்றியும்!

பிரதமர் மோடி நாளை மே.வங்கம், அசாம் பயணம்!

SCROLL FOR NEXT