செய்திகள்

யோகி பாபுவின் பொம்மை நாயகி வெளியீட்டுத் தேதி அறிவிப்பு

இயக்குநர் பா.ரஞ்சித் தயாரிப்பில் நடிகர் யோகி பாபு நடிக்கும் ‘பொம்மை நாயகி’ படம் பிப்ரவரி 3ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

DIN

இயக்குநர் பா.ரஞ்சித் தயாரிப்பில் நடிகர் யோகி பாபு நடிக்கும் ‘பொம்மை நாயகி’ படம் பிப்ரவரி 3ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இயக்குநர் பா.ரஞ்சித் தயாரிப்பு நிறுவனமான நீலம் புரொடக்‌ஷன்ஸ் மற்றும் யாழி பிலிம்ஸ் இணை தயாரிப்பில் உருவாகிவரும் பொம்மை திரைப்படத்தில் பிரபல காமெடி நடிகரான யோகி பாபு நடித்துள்ளார். இப்படத்தை ஷான் இயக்குகிறார். 

இந்தப் படத்தின் முதல் பார்வை போஸ்டர்கள் ஏற்கெனவே வெளியாகி வரவேற்பைப் பெற்ற நிலையில் தற்போது படத்தின் வெளியீட்டுத் தேதி புதன்கிழமை அறிவிக்கப்பட்டது. 

அதன்படி பிப்ரவரி 3ஆம் தேதி திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கூட்டணி ஆட்சியா? - நயினார் நாகேந்திரன் சூசகம்!

”ரொம்ப அரிய தலைவர் நல்லகண்ணு!” நடிகர் கார்த்தி அஞ்சலி

சென்னையில் முகாமிடும் அமலாக்கத்துறை தலைமை இயக்குநர்! காரணம் என்ன?

சின்ன சின்ன டிப்ஸ்! உடலுக்கும் வீட்டுக்கும்!

சிறப்புக் காட்சியில் வரவேற்பைப் பெற்ற தாய் கிழவி..! பிரபலங்கள் பங்கேற்பு!

SCROLL FOR NEXT