செய்திகள்

கமல்ஹாசனுடன் இணையும் லிங்குசாமி!

திருப்பதி பிரதர்ஸ் தயாரிப்பில் நடிகர் கமல்ஹாசன் நடிக்க ஒப்புக்கொண்டதாக இயக்குநர் லிங்குசாமி தெரிவித்துள்ளார்.

DIN

திருப்பதி பிரதர்ஸ் தயாரிப்பில் நடிகர் கமல்ஹாசன் நடிக்க ஒப்புக்கொண்டதாக இயக்குநர் லிங்குசாமி தெரிவித்துள்ளார்.

இயக்குநர் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் தயாரிப்பு நிறுவனம் சில ஆண்டுகளாக புதிய படங்களை தயாரிக்கமால் இருந்தது. இதற்கு காரணம் அந்நிறுவன தயாரிப்பில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான ‘உத்தம வில்லன்’ தோல்விதான் என பேசப்பட்டு வந்தது. 

இந்நிலையில், பிகினிங் படத்திற்கான பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்ட இயக்குநர் லிங்குசாமி, “உத்தம வில்லன் திரைப்படத்தால் திருப்பதி பிரதரஸ் பெரிய நஷ்டத்தை சந்தித்ததும் அதன்பின் பட தயாரிப்பை விட்டு விலங்கியதும் உண்மைதான். ஆனால், கமல்ஹாசன் தன் முழு உழைப்பை அதில் கொடுத்தார். இருப்பினும் தோல்வியடைந்தது. அதற்கு அவர் காரணம் இல்லை. ஆனாலும் அந்த நஷ்டத்திற்காக கமல் சாரிடம் பேசியிருக்கிறேன். திருப்பதி பிரதர்ஸ் தயாரிப்பில் மீண்டும் அவர் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார்.” எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னை திரும்பினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

மேஷம் - மீனம்: தினப்பலன்கள்!

காரங்காடு படகு சவாரி ரத்து

காலமானாா் ஆா்.எஸ்.நாராயணன்

வாணிம்பாடியில் மரக்கடையில் தீ விபத்து

SCROLL FOR NEXT