பிரின்ஸ் தோல்வி: இழப்பீடு வழங்கிய சிவகார்த்திகேயன்!
பிரின்ஸ் திரைப்படத்தின் தோல்விக்காக விநியோகிஸ்தர்களுக்கு சிவகார்த்திகேயன் இழப்பீடு வழங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரின்ஸ் திரைப்படத்தின் தோல்விக்காக விநியோகிஸ்தர்களுக்கு சிவகார்த்திகேயன் இழப்பீடு வழங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் மற்றும் சுரேஷ் புரோடக்ஷன் தயாரிப்பில் தெலுங்கில் ஜதி ரத்னாலு என்ற நகைச்சுவை வெற்றிப் படத்தைக் கொடுத்த இயக்குநர் அனுதீப் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் தீபாவளி வெளியீடாக திரைக்கு வந்த படம் பிரின்ஸ். இதில் உக்ரைன் நாட்டைச் சேர்ந்த மரியா சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
இதையும் படிக்க: தள்ளிப்போகும் வாடிவாசல் படப்பிடிப்பு!
Advertisement
தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியான இப்படம் கடுமையான விமர்சனங்களைப் பெற்றதுடன் தோல்விப் படமாகவும் அமைந்தது.
இந்நிலையில், சிவகார்த்திகேயன் இப்படத்தை விநியோகிஸ்தவர்களுக்கு இழப்பீடாக ரூ.3 கோடி வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.