ஐபிஎல் 2026: ஆரஞ்ச் கேப், பர்பிள் கேப், டேபிள் டாப்பர் என ஆதிக்கம் செலுத்தும் பஞ்சாப்!
ஐபிஎல் 2026ல் ஆதிக்கம் செலுத்தும் பஞ்சாப் கிங்ஸ் அணி குறித்து...
ரிக்கி பாண்டிங் பயிற்சியில் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையில் ஐபிஎல் 2026 சீசனில் பஞ்சாப் கிங்ஸ் அணி ஆரஞ்ச் கேப், பர்பிள் கேப், டேபிள் டாப்பர் என ஆதிகம் செலுத்தி வருகிறது.
கடந்த சீசனில் இறுதிப் போட்டியில் ஆர்சிபி அணியிடம் தோல்வியுற்ற பஞ்சாப் அணி தனது முதல் ஐபிஎல் கோப்பையை வெல்லும் முனைப்பில் தீவிரமாக இருக்கிறது.
பஞ்சாப் அணி தனது முதல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்தப் போட்டியில் கூப்பர் கானலி ஆட்ட நாயகன் விருது வென்றார்.
Advertisement
Advertisement
பஞ்சாப் தனது இரண்டாவது போட்டியில் சிஎஸ்கேவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தியது. இந்தப் போட்டியில் தொடக்க வீரர் பிரியான்ஷ் ஆர்யா ஆட்ட நாயகன் விருது வென்றார்.
ஐபிஎல் 2026 சீசனில் அதிக ரன்கள் எடுத்தவராக பஞ்சாபின் கூப்பர் கானலி (108) ரன்களுடன் முதலிடத்தில் இருக்கிறார். அதிக விக்கெட்டுகள் (5) எடுத்தவார பஞ்சாபின் விஜய் குமார் வைஷக் இருக்கிறார்.
அதிக விக்கெட்டுகள் எடுத்தவர்களுக்கு பர்பிள் தொப்பியும் அதிக ரன்கள் எடுத்தவர்களுக்கு ஆரஞ்ச் நிறத் தொப்பியும் வழங்கப்படுகிறது. இந்த 2 தொப்பியும் பஞ்சாப் வீரர்களிடம் இருப்பது குறிப்பிடத்தக்கது.
பஞ்சாப் அணி 2 போட்டிகளிலும் வென்று 4 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது.
Orange Cap, Purple Cap and Table toppers is Punjab Kings players full domination in ipl 2026.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.