FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கிரிக்கெட்

16 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா திரும்பும் லலித் மோடி..! ஐபிஎல் தொடரை வாங்குவாரா?

ஐபிஎல் நிறுவனர் லலித் மோடி மீண்டும் இந்தியாவுக்குத் திரும்புவது குறித்து...

Updated On : 12 ஆகஸ்ட் 2026, 6:03 pm IST
லலித் மோடி - கோப்புப்படம்
பகிர்:

ஐபிஎல் நிறுவனரும் தொழில் அதிபருமான லலித் மோடி மீண்டும் இந்தியாவுக்குத் திரும்புவதாக தனது இன்ஸ்டா பக்கத்தில் அறிவித்துள்ளார்.

பிசிசிஐ நிருவனம் இவரை கடந்த 2013ல் வாழ்நாள் தடை விதித்தது. பின்னர், அவரது வழக்கத்துக்கு மாறான வருமானம் குறித்து அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டது.

ஐபிஎல் போட்டிகளை நிறுவிய லலித் மோடி அப்போது பிசிசிஐயின் துணைத் தலைவராக இருந்தார். பிசிசிஐ ஒழுங்குமுறை ஆணையம் அவர் மீது 8 வகையான வழக்குகளில் குற்றம் சுமத்தியது. அதனால், 2013ல் அவருக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது.

Advertisement

Advertisement

பின்னர், லலித் மோடி லண்டனுக்குக் குடிபெயர்ந்தார். இந்தாண்டு ஜூலையில் கடத்தல்காரர்கள் மற்றும் அந்நியச் செலாவணி முறைகேட்டில் ஈடுபடுபவர்கள் மீதான 1976ஆவது சட்டத்தின்படி அமலாக்கத்துறை பதிந்த அனைத்து வழங்குகளையும் தீர்ப்பாயம் ரத்து செய்து உத்தரவிட்டது.

சமீபத்தில் அவர் மீண்டும் இந்தியா திரும்புவதாகக் கூறியிருந்தார். இந்த நிலையில், அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில், “நான் திரும்ப வருகிறேன். எனக்கான அனைத்து கதவுகளும் மூடப்பட்டன. தற்போது, அந்தக் கட்டடத்தையே வாங்க திரும்ப வருகிறேன்”எனக் கூறியுள்ளார்.

லலித் மோடி கூறியதன் அர்த்தம் என்னவென்று சமூக வலைதளத்தில் விவாதம் நடைபெற்று வருகிறது. ஒருவேளை ஐபிஎல் தொடரையே விலைக்கு வாங்குவாரா? என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

மேலும் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ‘லட்சக்கணக்கான கனவுகளுக்கு பின்புறமிருக்கும் அரசன்’ என்றும் ‘தி கோட்’ என்றும் ‘ஆட்டத்தை மாற்றியவர்’ என்றும் இருக்கும் பதிவுகளைப் பகிர்ந்துள்ளார்.

முன்னதாக, “தீர்ப்புக்கு மகிழ்ச்சி. மிக முக்கியமான நாள். 16 ஆண்டுகளாகப் போராடி வென்றுள்ளேன். நான் என்னவெல்லாம் கூறினேனோ அதெல்லாமே உண்மையாக மாறியிருக்கிறது. தீர்ப்பாயம் எனக்கு சாதகமாக தீர்ப்பளித்துள்ளது. ஐபிஎல் மீதான நல்லெண்ணம் மட்டுமே எனக்கு எப்போதும் இருக்கும். அதுதான் எனக்கு முக்கியமானது” எனக் கூறியிருந்தார்.

summary

IPL founder Lalit Modi says he is coming back to India. ‘To buy the building’

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments