FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

டி.வி. நிகழ்ச்சிகளில் எவ்வளவு விளம்பரம் வேண்டுமானாலும் ஒளிபரப்பலாம்! அதிர்ச்சி முடிவு!

இந்தியத் தொலைக்காட்சிகளில் விளம்பரங்களுக்கான 12 நிமிடக் கட்டுப்பாட்டை மத்திய அரசு நீக்கி உத்தரவிட்டது குறித்து...

Updated On : 15 ஆகஸ்ட் 2026, 4:58 pm IST
டி.வி. நிகழ்ச்சிகளில் எவ்வளவு விளம்பரம் வேண்டுமானாலும் ஒளிபரப்பலாம்... - பிரதிப் படம்
பகிர்:

இந்தியத் தொலைக்காட்சிகளில் விளம்பரங்களுக்கான 12 நிமிடக் கட்டுப்பாட்டை மத்திய அரசு நீக்கி உத்தரவிட்டுள்ளது.

இந்தியத் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் தொலைக்காட்சி அலைவரிசைகளுக்கு தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான 'ட்ராய்' (TRAI) அமைப்பால் இதுவரை விதிக்கப்பட்டிருந்த ஒரு மணிநேரத்துக்கு அதிகபட்சமாக 12 நிமிடங்கள் மட்டுமே விளம்பரம் ஒளிபரப்ப வேண்டும் என்ற அட்வர்டைஸ்மென்ட் வரம்பை (12-minute-per-hour ad cap) இந்திய அரசு தற்போது அதிகாரப்பூர்வமாக நீக்கியுள்ளது.

இக்கட்டுப்பாடு தங்களது வர்த்தக சுதந்திரத்தை முடக்குவதுடன் வருவாயைப் பெருமளவில் பாதிப்பதாகத் தொலைக்காட்சி நிறுவனங்கள் மற்றும் ஒளிபரப்பாளர்கள் நீண்டகாலமாக எதிர்த்து வந்த நிலையில், அரசின் இந்த அதிரடி முடிவால் இனி சேனல்கள் தங்களின் விருப்பத்திற்கேற்ப விளம்பர நேரத்தைத் தீர்மானித்துக்கொள்ள முடிவதோடு அவர்களின் விளம்பர வருவாயும் கணிசமாக அதிகரிக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது.

Advertisement

Advertisement

இருப்பினும், இந்த வரம்பு நீக்கத்தால் நிகழ்ச்சிகளுக்கு இடையே அளவுக்கு அதிகமான விளம்பரங்கள் ஒளிபரப்பப்பட்டு நேயர்களின் (Viewers) தொலைக்காட்சி பார்க்கும் அனுபவம் பெரிதும் பாதிக்கப்படலாம் என்ற கவலையும் சமூக ஆர்வலர்களிடையே எழுந்துள்ளது.

summary

Government removes 12-minute ad duration cap for TV channels

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments