FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

மத்திய உள்துறை, அமைச்சரவைச் செயலர்களின் பதவிக்காலம் நீட்டிப்பு!

மத்திய அமைச்சரவை மற்றும் உள்துறைச் செயலர்களின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது குறித்து...

Updated On : 5 ஆகஸ்ட் 2026, 6:41 pm IST
மத்திய அமைச்சரவைச் செயலர் டி.வி. சோமநாதன்...
பகிர்:

மத்திய அமைச்சரவை மற்றும் உள்துறையின் செயலர்களின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

மத்திய அமைச்சரவையின் செயலராகக் கடந்த 2024 ஆகஸ்ட் மாதம் முதல் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி டி.வி. சோமநாதன் பணியாற்றி வருகிறார்.

இவரைப்போல், மத்திய உள்துறைச் செயலராகக் கடந்த 2024 ஆகஸ்ட் மாதம் முதல் சிக்கிமைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி கோவிந்த் மோகன் பணியாற்றி வருகிறார். இவர்கள் இருவருக்கும் வரும் ஆகஸ்ட் மாதத்துடன் பதவிக்காலம் நிறைவடைகிறது.

Advertisement

Advertisement

இந்த நிலையில், நாட்டின் முக்கிய துறைகளின் செயலர்களான டி.வி. சோமநாதன் மற்றும் கோவிந்த் மோகன் ஆகிய இருவருக்கும் இன்னும் ஓராண்டிற்குப் பதவிக்காலம் நீட்டிக்கப்படுவதாக, மத்திய அரசு இன்று (ஆக. 5) அறிவித்துள்ளது.

முன்னதாக, 1987 ஆம் ஆண்டின் ஐஏஎஸ் அதிகாரிகள் பிரிவைச் சேர்ந்த டி.வி. சோமநாதன் நிதித்துறையின் செயலராகவும், பிரதமர் அலுவலகத்தின் கூடுதல் மற்றும் இணைச் செயலராகவும் பணியாற்றியுள்ளார்.

வாஷிங்டன் டி.சி.-யில் உள்ள உலக வங்கியின் இளம் தொழில்முறை நிபுணர்கள் திட்டத்தின் கீழ் தனது பணியைத் தொடங்கிய டி.வி. சோமநாதன் அங்கு இயக்குநராகவும் பணியாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

summary

The tenures of the Secretaries to the Union Cabinet and the Ministry of Home Affairs have been extended.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments