FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

சேலம் - திண்டுக்கல்; ஒசூர் - ஓமலூர் இருவழி ரயில் தடத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

சேலம் - திண்டுக்கல்; ஒசூர் - ஓமலூர் இருவழி ரயில் தடத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது பற்றி...

9 செப்டம்பர் 2026, 5:01 pm IST
சேலம் - திண்டுக்கல்; ஒசூர் - ஓமலூர் இருவழி ரயில் தடத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் - பிரதிப் படம்
பகிர்:

தமிழ்நாடு, கர்நாடகம், தெலங்கானா மற்றும் ஆந்திரப் பிரதேச மாநிலங்களில் புதிதாக 5 ரயில்வே திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் வழங்கியுள்ளது.

தில்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில், பல்வேறு திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இதில், தமிழ்நாடு, கர்நாடகம், தெலங்கானா மற்றும் ஆந்திரப் பிரதேச மாநிலங்களின் மக்கள் பயன்பெறும் வகையில், 540 கிலோ மீட்டருக்கு புதிய தண்டவாளம் அமைக்கும் திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

இதுகுறித்து மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஸ்ணவ் செய்தியாளர்களுடன் பேசியதாவது:

”தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் உள்ள 17 மாவட்டங்களை உள்ளடக்கிய 5 ரயில் பாதை விரிவாக்கத் (மல்டி-ட்ராகிங்) திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இத்திட்டங்கள் மூலம் இந்திய ரயில்வேயின் தற்போதைய கட்டமைப்புடன் சுமார் 540 கி.மீ. கூடுதல் வழித்தடம் இணைக்கப்படும். மொத்த மதிப்பீடு ரூ. 10,021 கோடி ஆகும்; இவை 2029-30-ஆம் ஆண்டுக்குள் முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளன.

சுமார் 52 லட்சம் மக்கள் வசிக்கும் ஏறக்குறைய 2,121 கிராமங்களுக்கான போக்குவரத்து இணைப்பை மேம்படுத்தும். இந்தக் கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகள் மூலம், ஆண்டுக்கு 4.7 கோடி டன்கள் அளவிலான கூடுதல் சரக்கு போக்குவரத்துக்கான திறன் உருவாக்கப்படும்” எனத் தெரிவித்தார்.

புதிய திட்டங்கள்

  1. அரக்கோணம் – ரேணிகுண்டா 3-வது மற்றும் 4-வது ரயில் பாதை – 77 கி.மீ

  2. ஒயிட்ஃபீல்ட் – பங்காரப்பேட்டை 3-வது மற்றும் 4-வது ரயில் பாதை – 47 கி.மீ

  3. ஒசூர் – ஓமலூர் இரட்டை ரயில் பாதை – 147 கி.மீ

  4. சேலம் – கரூர் – திண்டுக்கல் இரட்டை ரயில் பாதை – 159 கி.மீ

  5. செகந்திராபாத் (காட்கேசர்) – காசிபேட்டை இடையே கூடுதல் ரயில் பாதை – 110 கி.மீ

summary

Union Cabinet approves Salem-Dindigul and Hosur-Omalur railway line doubling projects!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments