நியூயார்க்: பீட்சா டெலிவரி செய்யும்போது பஞ்சாப் இளைஞர் சுட்டுக்கொலை!
நியூயார்க்கில் பஞ்சாப் இளைஞர் மர்மநபரால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பற்றி....
நியூயார்க்கில் பீட்சா டெலிவரி செய்யும்போது பஞ்சாப் இளைஞர் அடையாளம் தெரியாத நபரால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாப் மாநிலம், பிகோவால் கிராமத்தைச் சேர்ந்த குர்தீப் சிங் (28). நியூயார்க்கில் உள்ள இவர் சம்பவத்தன்று பீட்சா டெலிவரி செய்யச் சென்றிருக்கிறார். அப்போது அடையாளம் தெரியாத நபரால் அவர் சுட்டுக் கொல்லப்பட்டார். இச்சம்பவத்தால் அவரது கிராம மக்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இந்தத் தாக்குதல் கொள்ளை முயற்சியின் காரணமாக நடந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. நியூயார்க் நகர உள்ளூர் காவல்துறை வழக்கை விசாரித்த பிறகே கூடுதல் விவரங்கள் தெரியவரும். குர்தீப் சிங்கிற்கு தந்தையும் ஒரு சகோதரரும் உள்ளனர். அவரது உடலை விரைவில் இந்தியா கொண்டு வர அரசு உதவ வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Advertisement
Advertisement
மேலும், குற்றம் சாட்டப்பட்டவரை விரைவாகக் கைது செய்து கடுமையான தண்டனையை உறுதி செய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அமெரிக்க அதிகாரிகள் எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். குர்தீப் சிங் 13 ஆண்டுகளுக்கு முன்பு கடன் வாங்கி அமெரிக்கா சென்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
A tragic incident has come to light involving the death of a young man from Punjab in the US. Gurdeep Singh, 28, was shot dead by an unidentified shooter while he was out delivering pizza in New York City.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.