FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

வீட்டிற்கே துப்பாக்கிகளை டெலிவரி செய்த 4 இளைஞர்கள் கைது!

பஞ்சாபில் வீட்டிற்கே துப்பாக்கிகளை டெலிவரி செய்த 4 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.

Updated On : 14 ஜூலை 2026, 10:20 pm IST
கைப்பற்றப்பட்ட துப்பாக்கிகள்
பகிர்:

பஞ்சாபில் பார்சல் டெலிவரி ஊழியர்கள் போன்று நடித்து வாடிக்கையாளர்களின் இருப்பிடத்திற்கே சென்று ஆயுத விநியோகம் செய்த ஆயுதக் கடத்தல் கும்பலை பஞ்சாப் காவல்துறை கைது செய்துள்ளது.

அவர்களிடமிருந்து மத்தியப் பிரதேசத்திலிருந்து கொண்டுவரப்பட்ட 15 சட்டவிரோத கைத்துப்பாக்கிகள் மற்றும் 30 தோட்டாக்களைக் கைப்பற்றிய காவல்துறையினர், 25 வயதுக்குள்பட்ட 4 இளைஞர்களைக் கைது செய்தனர்.

இந்தக் கும்பல் மத்தியப் பிரதேசத்தில் ஆயுதங்களை குறைந்த விலையில் வாங்கி, பஞ்சாபில் உள்ள ரவுடிக் கும்பல்களுக்கு அதிக விலைக்கு விற்று வந்துள்ளனர்.

Advertisement

Advertisement

கைது செய்யப்பட்ட இளைஞர்கள் சிறையில் உள்ள குற்றவாளியான கேங்ஸ்டர் சோனு கத்ரியுடன் நேரடித் தொடர்பில் இருப்பவர்கள். அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள், சோனு கத்ரியின் கும்பலைச் சேர்ந்தவர்களுக்கு கொடுக்க எடுத்து வரப்பட்டவை. கைது செய்யப்பட்டவர்கள் மீது கொலை, கொலை முயற்சி, கொள்ளை, கடத்தல் மற்றும் வழிப்பறி உள்ளிட்ட பல வழக்குகள் உள்ளன.

இந்த நபர்கள் கைது செய்யப்பட்டபோது ஃபிளிப்கார்ட் மற்றும் பிற டெலிவரி நிறுவனங்களின் சீருடைகளை அணிந்திருந்ததாக பாட்டியாலா நகர மூத்த காவல் கண்காணிப்பாளர் வருண் சர்மா தெரிவித்தார்.

"உண்மையான பார்சல்கள் போல தோற்றமளிக்கும் விதமாக, ஆயுதங்களை டெலிவரி அட்டைப்பெட்டிகளில் அடைத்து வைத்து டெலிவரி செய்தனர். இவ்வாறு யாருக்கெல்லாம் ஆயுதங்களை விற்பனை செய்துள்ளார்கள் என்ற விசாரணை நடைபெற்று வருகின்றது” என்று அவர் கூறினார்.

summary

Four youths arrested for delivering guns to house!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments