முகப்பு
செய்திகள்

மாரி செல்வராஜ் படத்தின் புதிய அப்டேட்!

தமிழ்த் திரையுலகில் ‘பரியேறும் பெருமாள்’ என்கிற முதல் படத்திலேயே அழுத்தமான படைப்பாளியாக அனைவராலும் பாராட்டப்பட்ட இயக்குநர் மாரி செல்வராஜ் தற்போது தயாரிப்பாளராகவும் களமிறங்கியுள்ளார். 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:41 PM
பகிர்:

தமிழ்த் திரையுலகில் ‘பரியேறும் பெருமாள்’ என்கிற முதல் படத்திலேயே அழுத்தமான படைப்பாளியாக அனைவராலும் பாராட்டப்பட்ட இயக்குநர் மாரி செல்வராஜ் தற்போது தயாரிப்பாளராகவும் களமிறங்கியுள்ளார். 

பரியேறும் பெருமாள், கர்ணன் ஆகிய படங்களுக்கு அடுத்ததாக தற்போது உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் மாமன்னன் என்கிற படத்தை இயக்கிய மாரி செல்வராஜ், அவரது நான்காவது திரைப்படமாக வாழை படத்தை, அவரே தயாரித்து இயக்குகிறார்.

சிறுவர்கள் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்க சிறுவர் சினிமாவாக இப்படம் உருவாகிறது. மேலும் இப்படத்தில் கலையரசன், நிகிலா விமல், திவ்யா துரைசாமி, வெயில் படப்புகழ் பிரியங்கா போன்றோரும் நடிக்கிறார்கள். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு. 

இந்நிலையில், வாழை படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக இயக்குநர் மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →