பிரதமர் நரேந்திர மோடி 
செய்திகள்

ஆர்ஆர்ஆர் படக்குழுவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

கோல்டன் குளோப் விருதை வென்ற ஆர்ஆர்ஆர் படக்குழுவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

DIN

கோல்டன் குளோப் விருதை வென்ற ஆர்ஆர்ஆர் படக்குழுவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இயக்குநா் எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கத்தில் வெளியான ‘ஆா்ஆா்ஆா்’ திரைப்படம் கடந்த மாா்ச் மாதம் தெலுங்கு, தமிழ், ஹிந்தி மொழிகளில் வெளியானது. நடிகா்கள் ராம்சரண், ஜூனியா் என்டிஆா் உள்ளிட்டோா் நடிப்பில் வெளியான இந்தத் திரைப்படம், மிகப் பெரிய வெற்றி பெற்றது. அத்துடன் உலக அளவில் ரூ.1,000 கோடிக்கும் அதிகமாக வசூலித்து சாதனை படைத்தது.

இந்நிலையில், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் நேற்று பிரம்மாண்டமாக நடைபெற்ற கோல்டன் குளோப் விருது நிகழ்வில் ஒரிஜினல் பாடல் என்ற பிரிவில் ஆர்ஆர்ஆர் படத்தின் நாட்டு கூத்து பாடல் வெற்றி பெற்றது. இந்த பிரிவுக்கு பரிந்துரைக்கப்பட்ட முதல் இந்திய பாடல் என்ற சாதனையும் படைத்துள்ளது.

இதுகுறித்து பிரதமர் மோடி வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில்,

“மிகச் சிறப்பான சாதனை. இந்த மதிப்புமிக்க கௌரவம் ஒவ்வொரு இந்தியரையும் மிகவும் பெருமைப்படுத்தியுள்ளது. இசையமைப்பாளர் கீரவாணி, பாடகர்கள்  ராகுல் சீப்லிகஞ்ச், காலா பைரவா, பிரேம் ரக்சித், இயக்குநர் ராஜமெளலி, நடிகர்கள் ராம்சரண், ஜூனியா் என்டிஆா் மற்றும் அனைத்து படக்குழுவினருக்கும் பாராட்டுகள்” என்று பதிவிட்டுள்ளார்.

மேலும், சமூக வலைதளங்களில் திரைத்துறையினர், அரசியல் தலைவர்கள் மற்றும் ரசிகர்கள் ஆர் ஆர் ஆர் படக்குழுவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

கூத்தாநல்லூரில் ஆடிப்பெருக்கு

கூட்டுறவு முழுநேர பட்டயப் படிப்பில் சேர காலநீட்டிப்பு

SCROLL FOR NEXT