செய்திகள்

’வாரிசு’ எப்படி இருக்கு? லோகேஷ் கனகராஜ் பதில்!

’வாரிசு’ திரைப்படத்தைப் பார்த்துவிட்டு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கருத்து தெரிவித்துள்ளார்.

DIN

’வாரிசு’ திரைப்படத்தைப் பார்த்துவிட்டு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கருத்து தெரிவித்துள்ளார்.

வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் வாரிசு. ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், ஷியாம், குஷ்பு, பிரகாஷ்ராஜ், யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

அஜித்தின் துணிவும் நடிகர் விஜய் நடிப்பில் உருவான ‘வாரிசு’ திரைப்படமும் இன்று திரையரங்குகளில் வெளியானது. இதனால், இருவரின் ரசிகர்களும் கொண்டாட்டத்தில் உள்ளனர்.

இந்நிலையில், வாரிசு திரைப்படத்தை பார்த்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ் , ‘படம் சிறப்பாக வந்துள்ளது. எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ரசிகர்களும் கொண்டாட்டத்துடன் கண்டனர்.’ எனத் தெரிவித்துள்ளார்.

லோகேஷ் கனகராஜ் ‘விஜய் 67’ படத்தை இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எத்தியோப்பியாவில் பிரதமர் மோடி! பிரதமர் அபி அகமது அலியுடன் சந்திப்பு!

ஈரோட்டில் நடைபெறும் விஜய் பிரசாரக் கூட்ட முன்னேற்பாடுகள் குறித்து Sengottaiyan!

சிஎஸ்கேவில் இணைந்த ராகுல் சஹார்!

முழு கொள்ளளவை எட்டிய செம்பரம்பாக்கம் ஏரி - உபரி நீர் திறப்பு அதிகரிப்பு!

தில்லி - ஆக்ரா விரைவுச் சாலையில் பேருந்துகள், கார்கள் அடுத்தடுத்து மோதல்! 4 பேர் பலி!

SCROLL FOR NEXT