இனியா படப்பிடிப்பு தளத்தில் கால் கட்டுடன் ஆல்யா மானசா 
செய்திகள்

கால் கட்டுடன் சீரியலில் நடிக்க வந்த ஆல்யா மானசா!

சின்னத் திரை நடிகை ஆல்யா மானசாவுக்கு கால் முறிவு ஏற்பட்டுள்ள நிலையில், கால் கட்டுடன் படப்பிடிப்பில் கலந்துகொண்ட விடியோ வெளியாகியுள்ளது

DIN


சின்னத் திரை நடிகை ஆல்யா மானசாவுக்கு கால் முறிவு ஏற்பட்டுள்ள நிலையில், கால் கட்டுடன் படப்பிடிப்பில் கலந்துகொண்ட விடியோ வெளியாகியுள்ளது. இதற்கு ரசிகர்கள் பலர் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். 

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் இனியா தொடரில், நடிகை ஆல்யா மானசா நடித்து வருகிறார். ரோஜா தொடருக்கு பதிலாக கடந்த டிசம்பர் மாதம் முதல் ஒளிபரப்பாகி வரும் இனியா தொடர், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 

சமீபத்தில் ஒளிபரப்பான பெரியார் பற்றிய காட்சிகள் சமூக வலைதளத்தில் பலரின் பாராட்டுகளைப் பெற்றது. விஜய் தொலைக்காட்சியின் ராஜா ராணி தொடரில் அறிமுகமான ஆல்யா மானசா, படிப்படியாக தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை உருவாக்கிக்கொண்டார். 

அதே தொடரில் நடித்து வந்த சஞ்சீவ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு ஒரு பெண், ஒரு ஆண் குழந்தை உள்ளது. அவரின் கணவர் சஞ்சீவ் சன் தொலைக்காட்சியின் கயல் தொடரில் முதன்மை பாத்திரத்தில் நடித்து வருகிறார். 

இந்நிலையில், நடிகை ஆல்யா மானசாவுக்கு கால் முறிவு ஏற்பட்டுள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், இன்று அறுவை சிகிச்சை செய்துகொள்ளவுள்ளதாக சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். 

இதனிடையே சிகிச்சைக்கு மத்தியில் இனியா தொடர் படப்பிடிப்பில் ஆல்யா கலந்துகொண்டார். அப்போது படப்பிடிப்பு தளத்தில் கால் கட்டுடன் சர்க்கர நாற்காலியில் அமர்ந்துகொண்டு வண்டுடன் விளையாடிக்கொண்டிருந்த விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.

காயம் முழுமையாக குணமடையாத நிலையில், கட்டுடன் படப்பிடிப்பில் கலந்துகொண்ட ஆல்யாவுக்கு ரசிகர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

3 நாள் டிஜிட்டல் அரெஸ்ட்: மாரடைப்பில் ஓய்வுபெற்ற மருத்துவர் மரணம்!

விழா மேடையில் நடைபெற்ற திருமண நிச்சயதார்த்தம்! கண்கலங்கிய அர்ச்சனா!

இந்தியா-பாகிஸ்தான் மோதலில் மூன்றாம் தரப்பு தலையீடு இல்லை: ராஜ்நாத் சிங்!

பெரியாரை விமர்சிப்பவர்கள் அரசியலில் இருந்து காணாமல் போவார்கள்! - ஜெயக்குமார்

பெரியார் பிறந்தநாள்! அமைச்சர் சேகர்பாபு மரியாதை!

SCROLL FOR NEXT