முகப்பு
செய்திகள்

விரைவில் ‘விஜய் 67’ அப்டேட்!

விஜய் 67 படத்தின் புதிய அப்டேட் விரைவில் வெளியாகும் என அப்படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:42 PM
பகிர்:

விஜய் 67 படத்தின் புதிய அப்டேட் விரைவில் வெளியாகும் என அப்படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.

தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து, லோகேஷ் கனகராஜுடன் இரண்டாவது முறையாக விஜய் இணைந்துள்ளார்.

விக்ரம் திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து, விஜய் 67 படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு பணிகளை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தொடங்கியுள்ளார்.

Advertisement

லோகேஷ் - விஜய்யின் முதல் படமான மாஸ்டர் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில், இந்த படம் முழுக்க முழுக்க லோகேஷ் ஸ்டைலில் தான் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

காதல் காட்சிகள், பாடல்கள் எதுவும் இல்லாமல் கைதி படம் போன்று முழுக்க முழுக்க பான் இந்தியா ஆக்‌ஷன் படமாக உருவாகிறது விஜய் 67.

இந்தப் படத்தில் இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன், மிஸ்கின், மன்சூர் அலிகான்,  சஞ்சய் தத் எனப் பலர் நடிக்கவுள்ளனர்.

இந்நிலையில், வாரிசு திரைப்படம் வெளியானதால் இனி வரும் நாள்களில் ‘விஜய் 67’ குறித்து அப்டேட்கள் தரப்படும் என லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments