செய்திகள்

மீண்டும் ரஜினியுடன் இணையும் மோகன்லால்!

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகும் லால் சலாம் திரைப்படத்தில் மலையாள திரையுலக சூப்பர் ஸ்டார் மோகன் லால் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

DIN

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகும் லால் சலாம் திரைப்படத்தில் மலையாள திரையுலக சூப்பர் ஸ்டார் மோகன் லால் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் நடிப்பில் லால் சலாம் திரைப்படம் உருவாகி வருகிறது. லைக்கா நிறுவனம் தயாரிப்பில், பிரமாண்ட படைப்பாக உருவாகும் இந்த படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசைமையக்கவுள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இந்தப் படத்தில் முக்கிய கதாபத்திரத்தில் நடிக்க உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இப்படத்தின் படபிடிப்பு அடுத்த மாதம் தொடங்கவுள்ளதாகவும், ஆரம்பக்கட்ட பணிகள் மிக வேகமாக நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இப்படத்தில் ரஜினியுடன் மலையாள திரையுலக சூப்பர் ஸ்டார் மோகன் லால், கன்னட சூப்பர் ஸ்டார் ஷிவ ராஜ் குமார், நடிகை ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வஸந்த் ரவி என ஓட்டுமொத்த நடிகர் பட்டாளமே நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

31 பந்துகளில் சதம் விளாசிய உர்வில் படேல்..! சிஎஸ்கேவின் எழுச்சி நாயகன்!

இலங்கை அருகே உருவாகும் புதிய புயலின் பெயர் தெரியுமா?

ஆருத்ரா கோல்ட் மோசடி: சென்னை உள்பட 15 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!

சென்னையில் விசா மோசடியா? அமெரிக்க எம்.பி. குற்றச்சாட்டு!

இந்திய வீரர்களை மண்டியிடச் செய்ய விரும்பினோம்! தெ.ஆ. பயிற்சியாளரின் சர்ச்சை கருத்து!

SCROLL FOR NEXT