செய்திகள்

வாத்தி படத்தின் 'நாடோடி மன்னன்' பாடல் வெளியீடு!

வாத்தி படத்தின் 'நாடோடி மன்னன்' பாடல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

DIN

வாத்தி படத்தின் 'நாடோடி மன்னன்' பாடல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

'திருச்சிற்றம்பலம்', 'நானே வருவேன்' படங்களுக்கு பிறகு தனுஷ் தற்போது வெங்கி அட்லுரி இயக்கத்தில் 'வாத்தி' படத்தில் நடித்துள்ளார். தெலுங்கில் சார் என்ற பெயரில் இந்தப் படம் உருவாகியுள்ளது.

சித்தாரா எண்டர்டெயின்மென்ட்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சம்யுக்தா மேனன் நடிக்க, சமுத்திரக்கனி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.  

'வாத்தி' திரைப்படம் பிப்ரவரி 17ஆம் தேதி வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது. பிப்ரவரியில் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இந்நிலையில் இப்படத்தின் 'நாடோடி மன்னன்' எனும் பாடல் வரும் ஜன.17-ஆம் தேதி வெளியாகும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி தற்போது அந்த பாடல் வெளியாகியுள்ளது.  

இந்த பாடலை யுகபாரதி எழதியுள்ளார். அந்தோணி தாசன் பாடியுள்ளார். பாடல் வெளியானதையடுத்து தனுஷ் ரசிகர்கள் பாடலை அதிகளவு பகிர்ந்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அதிமுக புதுவை செயலா் அன்பழகனுக்கு சென்னையில் இதய அறுவை சிகிச்சை

ஜாடை காட்டியே... மேகா ஷுக்லா!

களைகட்டிய விநாயகர் சிலைகள் விற்பனை - புகைப்படங்கள்

சமூக ஊடகப் பதிவுகளுக்கு விரைவில் கட்டுப்பாடு! - உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்

ஜம்மு - காஷ்மீரில் கனமழை - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT