செய்திகள்

கோயிலுக்குள் அனுமதி மறுப்பு: அமலா பால் வேதனை

தன்னை கோயிலுக்குள் விட மறுத்ததாக பிரபல நடிகை அமலா பால் வருத்தம் தெரிவித்துள்ளார்.

DIN

தன்னை கோயிலுக்குள் விட மறுத்ததாக பிரபல நடிகை அமலா பால் வருத்தம் தெரிவித்துள்ளார்.

தமிழ் மற்றும் மலையாளப் படங்களில் நடித்து வருபவர் நடிகை அமலா பால். விஜய்யின் தலைவா போன்ற பெரிய படங்களில் நாயகியாக நடித்தவர். இயக்குநர் ஏ.எல்.விஜய்யை காதலித்து திருமணம் செய்துகொண்ட அமலா பால் விரைவிலேயே அவரை விவாகரத்து செய்தார்.

அதன்பின் மெல்ல மெல்ல தன் மார்க்கெட்டை இழந்தார். சமீபத்தில் அவர் நடிப்பில் ஓடிடி வெளியீடாக வந்த ‘டீச்சர்’ படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

இந்நிலையில், நடிகை அமலா பால்,  ‘கேரளத்தில் உள்ள திருவைராணிக்குளம் மகாதேவ கோயிலுக்குள் தன்னை உள்ளே நுழைய அனுமதிக்கவில்லை என்றும் 2023-லும் மதத்தின் அடிப்படையில் பாகுபாடுகள் இருப்பது வருத்தத்தைத் தருகிறது’ எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழகத்தில் வாக்காளா் பட்டியல் திருத்தப் பணி தொடங்கியது! தேவையான ஆவணங்கள் என்ன?

இரட்டை இலை விவகாரம்: தேர்தல் ஆணையத்துக்கு செங்கோட்டையன் கடிதம்!

தங்கம் விலை குறைவு! இன்றைய நிலவரம்!

சுங்கச் சாவடி கட்டண விவகாரம்: போக்குவரத்துக் கழக அதிகாரி பதிலளிக்க உத்தரவு

பிகார் முதல் கட்டத் தேர்தல்! இன்றுடன் பிரசாரம் ஓய்வு!

SCROLL FOR NEXT