படம் - twitter.com/iamRashmika/ 
செய்திகள்

விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த ராஷ்மிகா!

'வாரிசு' திரைப்படம் தொடர்பான விமர்சனங்களுக்கு ராஷ்மிகா மந்தனா முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

DIN

'வாரிசு' திரைப்படம் தொடர்பான விமர்சனங்களுக்கு ராஷ்மிகா மந்தனா முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

தமிழ் மற்றும் தெலுங்கில் பிரபல நடிகையாக இருப்பவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள திரைப்படம் 'வாரிசு'. இந்தப் படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார்.

சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ‘புஷ்பா’ ‘சீதாராமம்’ உள்ளிட்ட படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுத்தந்தது.

'வாரிசு' படம் ஜனவரி 11 ஆம் தேதி பொங்கல் பண்டிகையையொட்டி  திரைக்கு வந்தது. இந்தப் படத்தில் ராஷ்மிகாவின் கதாபாத்திரம் பெரிதளவில் இல்லை எனவும், 2 பாடல் காட்சிகளில் நடனமாடும் கதாநாயகியாக மட்டுமே ராஷ்மிகா நடித்திருந்தார் என பல விமர்சனங்கள் இவர் மீது எழுந்தது.

இந்த நிலையில், சமீபத்தில் ராஷ்மிகா மந்தனா ஒரு பேட்டியில் 'வாரிசு' படம் தொடர்பான விமர்சனத்திற்கு பதிலளித்தார்.

அதில், 'வாரிசு' படத்தை ஒப்புக்கொண்டதற்கு முக்கிய காரணம் நடிகர் விஜய் தான்.  அவருடன் நடிக்க வேண்டும் என்பதற்காக மட்டுமே இந்த படத்தில் நடிக்க  ஓப்புக்கொண்டேன்.

எல்லா வகையான படங்களில் நடிக்க வேண்டும் என்பதே எனது விருப்பம். அந்த அடிப்படையில் 'வாரிசு' படத்தில் நடித்தேன். கதாபாத்திற்கு முக்கியத்துவம் இல்லையன்றாலும் விஜய் உடன் நடித்தது மகிழ்ச்சி என்று ராஷ்மிகா தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாராட்டு நிச்சயம் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

கிராமப்புற மாணவா்களுக்கான ஆங்கில பேச்சுப் பயிற்சி

நொய்டாவில் தியாகராஜ ஆராதனை விழா

கந்திலி சந்தையில் ரூ. 2 கோடிக்கு வா்த்தகம்

போதை மாத்திரைகள் விற்பனை: பெண் உள்பட இருவா் கைது

SCROLL FOR NEXT