முகப்பு
செய்திகள்

படப்பிடிப்பு தளத்தில் நடிகை சமந்தா.. எந்தப் படம்?

சமந்தா, உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், தற்போது மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்றுள்ளதாக மகிழ்ச்சியான தகவல்கள் வெளியாகியுள்ளன.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 12:52 PM
படப்பிடிப்பு தளத்தில் நடிகை சமந்தா.. எந்தப் படம்?
பகிர்:


தமிழ், தெலுங்கு என திரைப்பட உலகில் முன்னணி நாயகியாக இருக்கும் நடிகை சமந்தா, உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், தற்போது மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்றுள்ளதாக மகிழ்ச்சியான தகவல்கள் வெளியாகியுள்ளன.

பல படங்களில் ஒப்பந்தமாகி பிசியாக நடித்து வந்த நடிகை சமந்தா திடீரென மயோசிடிஸ் எனப்படும் தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டு, தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார்.

தனது நோய் பாதிப்பு குறித்து அவரே சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து, நோய் குணமாக சிறிது காலம் ஆகும் என்றும் பதிவிட்டிருந்தார். இதனால் அவரது ரசிகர்கள் கவலை அடைந்தனர். இந்த தகவல் திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

ஏற்கனவே ஒப்பந்தமாகியிருந்த சில படங்களிலிருந்து விலகியதாகவும் செய்திகள் வெளியாகின. ஆனால் அதனை சமந்தா தரப்பு மறுத்திருந்தது.

இந்த நிலையில்தான், சமந்தாவின் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான தகவல் கிடைத்துள்ளது. வருண் தவானுடன் சிட்டாடல் இந்தியா என்ற வெப் தொடரில் நடிக்க ஏற்கனவே சமந்தா ஒப்பந்தமாகியிருந்தார்.

சமந்தா சிகிச்சையில் இருந்ததால் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. சிகிச்சையின் பலனாக சற்று குணமடைந்திருக்கும் சமந்தா, நீண்ட இடைவெளிக்குப் பிறகு சிட்டாடல் இந்தியா வெப் தொடர் படப்பிடிப்பில் சமந்தா பங்கேற்று நடித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் படக்குழுவினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
 

முழு கட்டுரையைப் படிக்க →