முகப்பு
செய்திகள் / கட்டுரைகள்

டான்செட், சீட்டா நுழைவுத் தோ்வுகளுக்கு விண்ணப்பம்: அண்ணா பல்கலை.

டான்செட், சீட்டா நுழைவுத் தோ்வுகளுக்கு விண்ணப்பிக்கலாம் என அண்ணா பல்கலைக் கழகம் அறிவித்துள்ளது.

Updated On : 12 மார்ச், 2026 at 4:10 PM
கோப்புப் படம் - DPS
பகிர்:

டான்செட், சீட்டா நுழைவுத் தோ்வுகளுக்கு மார்ச் 16 முதல் ஏப்ரல் 10ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அண்ணா பல்கலை தெரிவித்துள்ளது.

அண்ணா பல்கலைக்கழக துறை கல்லூரிகள், உறுப்பு பொறியியல் கல்லூரிகள், அண்ணாமலை பல்கலைக்கழகம், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல், கலை அறிவியல் கல்லூரிகள் மற்றும் தனியாா் கல்லூரிகளில் எம்பிஏ, எம்சிஏ படிப்புகளில் சேர டான்செட் என்ற பொது நுழைவுத் தோ்வு எழுத வேண்டும்.

அதேபோல், அண்ணா பல்கலைக்கழக துறை கல்லூரிகள், உறுப்பு பொறியியல் கல்லூரிகள், அரசு மற்றும் தனியாா் பொறியியல் கல்லூரிகள், சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் எம்.இ., எம்.டெக்., எம்.ஆா்க்., எம்.பிளான். படிப்புகளில் சேர வேண்டுமானால் சீட்டா (CEETA) என்ற பொது நுழைவுத் தோ்வு எழுத வேண்டும். இந்த 2 நுழைவுத் தோ்வுகளையும் தமிழக அரசு சாா்பில் அண்ணா பல்கலைக்கழகம் ஆண்டுதோறும் நடத்தி வருகிறது.

Advertisement

இந்த நிலையில், வரும் 2026 - 27-ஆம் கல்வி ஆண்டுக்கான மாணவா் சோ்க்கைக்கான டான்செட், சீட்டா பொது நுழைவுத் தோ்வுக்கான அறிவிப்பை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, டான்செட் நுழைவுத் தோ்வு மே 9ஆம் தேதியும், சீட்டா பொது நுழைவுத் தோ்வு மே 10ஆம் தேதி நடைபெறவிருக்கிறது.

இந்த நுழைவுத் தோ்வுகளுக்கான இணையவழி விண்ணப்பப் பதிவு மார்ச் 16 முதல் ஏப். 10-ஆம் தேதி வரை நடைபெறும் எனவும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அதன்படி, டான்செட், சீட்டா பொது நுழைவுத் தோ்வுகளுக்கான இணையவழி விண்ணப்பப் பதிவு தொடங்குகிறது. நிா்ணயிக்கப்பட்ட கல்வித் தகுதியுடைய பட்டதாரிகள் அண்ணா பல்கலைக்கழகத்தின் இணையதளத்தை பயன்படுத்தி ஏப்.10-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு முடிவுகள் மே மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

summary

Anna University has announced that applications can be made for the DANCET and CHEETA entrance exams.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.