செய்திகள்

விபத்துக்குப் பிறகு விஜய் ஆண்டனி முதல்முறையாக ட்வீட்! 

மலேசியாவில் படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்துக்குப் பிறகு விஜய் ஆண்டனி முதல்முறையாக ட்வீட் செய்துள்ளார். 

DIN

பிரபல இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி, பிச்சைக்காரன் 2 படத்தில் தற்போது நடித்து வருகிறார். இயக்கமும் அவரே தான். மலேசியாவில் உள்ள லங்காவி தீவில் பிச்சைக்காரன் 2 படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. 

படப்பிடிப்பில் சண்டைக் காட்சிகளைப் படமாக்கியபோது ஏற்பட்ட படகு விபத்தில் விஜய் ஆண்டனிக்குக் காயம் ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

விஜய் ஆண்டனியின் முகத்தில் கடுமையான காயங்கள் ஏற்பட்டுள்ளதாக தகவல்  வெளியாகியது. இந்நிலையில் முதல்முறையாக விபத்துக்குப் பிறகு நடிகர் விஜய் ஆண்டனி ட்விட்டரில் கூறியதாவது: 

அன்பான நண்பர்களே, மலேசியாவில் பிச்சைக்காரன் 2 படத்தின் படப்பிடிப்பில் ஏற்பட்ட கடுமையான விபத்தினால் ஏற்பட்ட தாடை மற்றும் மூக்கு  தற்போது பத்திரமாக மீட்கப்பட்டது. பெரிய அறுவை சிகிச்சை முடிந்துள்ளது. 

எவ்வளவு முடியுமோ அவ்வளவு விரைவில் உங்களுடன் பேச உள்ளேன். என்னுடைய உடல் நலத்தில் அக்கறை காட்டியதற்கும் ஆதரவாக இருந்ததற்கும் அனைவருக்கும் நன்றி. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மழை வருமோ... ராதிகா கௌஷிக்!

தீவிரமடையும் நெல் அறுவடைப் பணிகள்

உங்களை உணரும் கலை... தீப்தி சுனைனா!

ஹூண்டாய் புதிய வென்யூ கார் அறிமுகம் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT