கோப்புப்படம் 
செய்திகள்

‘விஜய் 67’: லோகேஷ் கனகராஜ் கூறிய முக்கிய அப்டேட்!

‘விஜய் 67’ படம் குறித்து முக்கிய அப்டேட்டை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.

DIN

‘விஜய் 67’ படம் குறித்து முக்கிய அப்டேட்டை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.

தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து, லோகேஷ் கனகராஜுடன் இரண்டாவது முறையாக விஜய் இணைந்துள்ளார்.

லோகேஷ் - விஜய்யின் முதல் படமான மாஸ்டர் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில், இந்த படம் முழுக்க முழுக்க லோகேஷ் ஸ்டைலில் தான் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

காதல் காட்சிகள், பாடல்கள் எதுவும் இல்லாமல் கைதி படம் போன்று முழுக்க முழுக்க பான் இந்தியா ஆக்‌ஷன் படமாக உருவாகிறது விஜய் 67.

இந்தப் படத்தில் இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன், மிஸ்கின், மன்சூர் அலிகான்,  சஞ்சய் தத் எனப் பலர் நடிக்கவுள்ளனர். மேலும், இப்படத்தின் புரோமோ படப்பிடிப்பு சென்னையில் படமாக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் மைக்கேல் படத்தின் விளம்பர நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது விஜய் 67 குறித்து மாணவர்கள் எழுப்பிய கேள்விக்கு, பிப்ரவரி 1,பிப்ரவரி 2, பிப்ரவரி 3 இந்த மூன்று தேதிகளை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். அப்டேட் வருகிறது எனத் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தி.மு.க.வுக்கு இது ‘மாநாடு மாதம்’: முதல்வர் மு.க.ஸ்டாலின்

அதீத தன்னம்பிக்கை வேண்டாம், சூழலுக்கேற்ப விளையாடுங்கள்; இந்திய அணிக்கு முன்னாள் கேப்டன் அறிவுரை!

புதிய வீடு கட்டிய அய்யனார் துணை சீரியல் நடிகை!

இறுதி வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா? அறிவது எப்படி?

இந்த சாதனையைச் செய்தது சாய் பல்லவிதான்!

SCROLL FOR NEXT