முகப்பு
செய்திகள்

கேஜிஎஃப் 2 படத்தின் வசூல் சாதனையை முறியடித்த ‘பதான்’?

ஷாருக்கான் நடித்துள்ள பதான் திரைப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.

Updated On : 26 ஜனவரி, 2023 at 2:13 PM
பகிர்:
Updated On : 6 பிப்ரவரி, 2024 at 6:24 PM

ஷாருக்கான் நடித்துள்ள பதான் திரைப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஷாருக்கான் நடிப்பில் உருவான பதான் படத்தினை இயக்குநர் ஆதித்யா சோப்ரா இயக்கியுள்ளார். யாஷ் ராஜ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள 50-வது திரைப்படமான பதான் நேற்று உலகம் முழுவதும் வெளியானது.

தீபிகா படுகோன், ஜான் ஆப்ரகாம், டிம்பள் கபாடியா ஆகியோர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

இந்நிலையில், பதான் படமானது முதல் நாளில் இந்தியாவில் மட்டும் ரூ.57 வசூலை குவித்துள்ளது. ஹிந்தியில் மட்டும் ரூ.55 கோடி வசூலித்துள்ளததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், உலகளவில் இப்படம் ரூ.100 கோடியை வசூல் செய்துள்ளது.

இதன்மூலம், கேஜிஎஃப் 2 படத்தின் வசூல் சாதனையை பதான் முறியடித்துள்ளதாக கூறப்படுகிறது. கேஜிஎஃப் 2 திரைப்படம் ஹிந்தியில் மட்டும் முதல் நாளில் ரூ.52 கோடி வசூலித்தது குறிப்பிடத்தக்கது.

பல்வேறு சர்ச்சைக்கு மத்தியில் விடுமுறை அல்லாத வார நாளில் வெளியாகி பதான் படைத்த சாதனையை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.