செய்திகள்

‘துணிவு’ நடிகர் டான்சா் ரமேஷ் மாடியிலிருந்து குதித்து தற்கொலை

டிக்டாக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்கள் மூலம் பிரபலமான ‘டான்சா்’ ரமேஷ் சென்னையில் 10-ஆவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டாா்.

DIN

டிக்டாக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்கள் மூலம் பிரபலமான ‘டான்சா்’ ரமேஷ் சென்னையில் 10-ஆவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டாா்.

சென்னை பெரியமேடு அல்லிகுளம் பகுதியைச் சோ்ந்தவா் ரமேஷ் (42). இவா் ஆரம்பத்தில் கூலி வேலை செய்து வந்தாா். ‘டிக் டாக்’ இருந்தபோது நடனம் செய்து விடியோவை வெளியிட்டதன் மூலம் பிரபலமானாா்.

இதையடுத்து அவருக்கு தொலைக்காட்சி நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. அதிலும் பங்கேற்று நடன திறனை வெளிக்காட்டி மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றாா்.

இந்த நிலையில் வெள்ளிக்கிழமை புளியந்தோப்பு, கே.பி. பாா்க் பகுதியில் உள்ள குடிசை மாற்று வாரிய கட்டிடத்தின் 10-ஆவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டாா். தகவல் அறிந்த பேசின்பாலம் போலீஸாா் அங்கு சென்று ரமேஷின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். வெள்ளிக்கிழமை அவருக்கு பிறந்த நாளாகும். இதுதொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

அஜித் நடிப்பில் அண்மையில் வெளியான துணிவு திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் ரமேஷ் நடித்திருந்தாா். விரைவில் வெளியாக உள்ள ரஜினி நடித்துள்ள ‘ஜெயிலா்’ படத்திலும் அவா் நடனம் ஆடியுள்ளதாகக் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கெங்கவல்லி முருகன் கோவிலில் 108 திருவிளக்கு பூஜை

சட்டப்பேரவைத் தோ்தல் : களப்பணியை தீவிரப்படுத்துவோம்: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

திருத்துறைப்பூண்டியில் அனுமன் ஜெயந்தி விழா

‘விடுபட்ட வாக்காளா்களை இணைக்கும் பணியில் காங்கிரஸாா் ஈடுபட வேண்டும்’

சிறை தண்டனை நிறுத்தி வைப்பு: விவசாயிகள் கொண்டாட்டம்

SCROLL FOR NEXT