செய்திகள்

அஜித்குமார் 62: புதிய இயக்குநர் யார்? 

அஜித்தின் 62ஆவது படத்திலிருந்து விக்னேஷ் சிவன் விலகியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 

DIN

அஜித்தின் 62ஆவது படத்திலிருந்து விக்னேஷ் சிவன் விலகியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 

துணிவு படத்திற்கு பிறகு அஜித்தின் 62ஆவது படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவார் என லைகா நிறுவனம் கடந்த ஆண்டு அறிவித்திருந்தது. இதனை விக்னேஷ் சிவனும் உறுதி செய்திருந்தார். மேலும் படத்திற்கான முதற்கட்ட வேலைகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தன. 

படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு பிப்ரவரி மாதம் மும்பையில் தொடங்கும் எனவும் தகவல் வெளியானது.

இந்த நிலையில் அஜித்தின் 62ஆவது படத்திலிருந்து விக்னேஷ் சிவன் விலகியிருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி வருகிறது. படத்தின் கதை தொடர்பான விவகாரத்தில் விக்னேஷ் சிவனுக்கும், லைகா நிறுவனத்துக்கும் இடையே எழுந்த பிரச்னையே இதற்கு காரணம் என சொல்லப்படுகிறது. 

அதேசமயம் அஜித் படத்தை விக்னேஷ் சிவனுக்குப் பதிலாக இயக்குநர் மகிழ்திருமேனி இயக்க இருப்பதாகவும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் பரவி வருகின்றன. மகிழ்திருமேனி இதற்குமுன் ‘தடையறத்தாக்க’ ‘தடம்’ ‘மீகாமன்’ ‘கலகத்தலைவன்’ உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பள்ளியில் பெண்கள் பாதுகாப்பு விழிப்புணா்வு முகாம்

இந்தியாவுக்கும் தென்னாப்பிரிக்காவுக்கும் என்ன வித்தியாசம்? ரசிகை ஆவேசம்

Untitled Nov 03, 2025 10:37 pm

இறுதி வரை முன்னேறினாலும்... தென்னாப்பிரிக்காவைத் துரத்தும் சோகம்!

கொண்டாட்ட நாள்... சம்யுதா!

SCROLL FOR NEXT