முகப்பு
செய்திகள்

இன்று வெளியாகும் சிம்புவின் ‘பத்து தல’ படத்தின் புதிய அப்டேட்

சிம்புவின் ‘பத்து தல’ படத்தின் புதிய அப்டேட்  இன்று வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:22 AM
கோப்புப்படம்
பகிர்:

சிம்புவின் ‘பத்து தல’ படத்தின் புதிய அப்டேட்  இன்று வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.

கன்னடத்தில் சிவராஜ்குமார் நடிப்பில் வெற்றிபெற்ற மஃப்டி திரைப்படம் தமிழில் சிம்பு நடிப்பில் பத்து தல என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு படமாக்கப்பட்டது. இந்தப் படத்தை 'சில்லுனு ஒரு காதல்', 'நெடுஞ்சாலை' படங்களை இயக்கிய கிருஷ்ணா இயக்கி உள்ளார்.

கௌதம் கார்த்திக், பிரியா பவானி ஷங்கர் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்தப் படத்தை ஸ்டுடியோ கிரீன் சார்பாக ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். 

இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. இந்நிலையில் படக்குழு புதிய அப்டேட்டை வெளியிட்டுள்ளது.  

இன்று மாலை 5.04  மணிக்கு இப்படத்தின் முதல் பாடல் குறித்த அறிவிப்பு வெளியாகும் என  படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, இந்தத் திரைப்படம் வரும் மார்ச் 30ஆம் நாள் வெளியாகுமென படக்குழு அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.