கங்குவா வெளியீடு எப்போது?
கங்குவா திரைப்படத்தின் வெளியீடு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
'அண்ணாத்த' படத்திற்கு பின் சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் சூர்யா நடிக்கிறார். 'கங்குவா' எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்கிறார். இதில் சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா பட்டானி நடிக்கிறார்.
படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானலில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதையும் படிக்க: மாமன்னன் வெற்றிக் கொண்டாட்டத்தில் படக்குழு!
Advertisement
இதன் ஓடிடி உரிமையை அமேசான் பிரைம் நிறுவனம் ரூ.80 கோடிக்கு வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது.
மேலும், கங்குவா படத்தின் பிளாஷ்பேக் காட்சிகளுக்காக நடிகர் சூர்யா உடல் எடையைக் கூட்டுவதற்காக உடல் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், இப்படம் அடுத்தாண்டு ஏப்ரல் மாதம் திரைக்கு வரும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.