முகப்பு
செய்திகள்

சீதா ராமன் தொடரில் நாயகியாக நடிக்கும் சசிகுமார் பட நடிகை!

ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சீதா ராமன் தொடரிலிருந்து விலகுவதாக நடிகை பிரியங்கா நல்காரி அறிவித்திருந்தார்.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 11:48 AM
பகிர்:

ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சீதா ராமன் தொடரிலிருந்து விலகுவதாக நடிகை பிரியங்கா நல்காரி அறிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து தற்போது அவருக்கு மாற்றாக நடிக்கவுள்ள நடிகை குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் தொடர்களுக்கு அதிக ரசிகர்கள் உள்ளனர். புதிய தொடர்களும் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. 

அந்தவகையில் கடந்த பிப்ரவரி மாதம் முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் தொடர் சீதா ராமன். இந்தத் தொடரில் பிரியங்கா நல்காரி முதன்மை பாத்திரத்தில் நடித்துவந்தார். 

பிரியங்கா நல்காரி

சன் தொலைக்காட்சியில் இவர் நடிப்பில் ஒளிபரப்பாகி வந்த ரோஜா தொடர் தொடர்ந்து டிஆர்பி பட்டியலில் முதலிடத்தில் நீடித்து வந்தது.

இந்நிலையில் தற்போது சீதா ராமன் தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். மலேசியாவில் கணவருடன் வசித்து வரும் நிலையில், தமிழ்நாட்டிற்கு படப்பிடிப்புற்கு வந்து செல்ல சிரமமாக உள்ளதால் அவர் சீதாராமன் தொடரிலிருந்து விலகுவதாகத் தெரிவித்துள்ளார். 

இந்நிலையில், அவருக்கு பதிலாக சீதா பாத்திரத்தில் நடிக்கவுள்ள நடிகை குறித்த தகவல் வெளியாகியுள்ளது. 

ஸ்ரீ பிரியங்கா

சீதாராமன் தொடரில் பிரியங்கா நல்காரிக்கு பதிலாக ஸ்ரீ பிரியங்கா என்ற நடிகை நடிக்கவுள்ளதாகத் தெரிகிறது. இவர் சசிகுமார் நடித்த கொம்பு வச்ச சிங்கம்டா படத்தில் நடித்தவர். 

மேலும், பெண் காவலர்களின் பிரச்னைகளை ஆழமாகப் பேசிய மிக மிக அவசரம் என்ற படத்தில் நடித்து பலரின் பாராட்டைப் பெற்றவர்.

இனி சீதா ராமன் தொடரில் சீதாவாக ஸ்ரீ பிரியங்கா நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.