செய்திகள்

நடிகர் கிச்சா சுதீப்பின் 46வது படம்: வெளியானது தமிழ் ப்ரோமோ விடியோ! 

பிரபல கன்னட நடிகர் கிச்சா சுதீப்பின் 46வது படத்தின் தமிழ் ப்ரோமோ விடியோ வெளியாகியுள்ளது. 

DIN

'நான் ஈ', 'புலி' படங்களின் மூலம் தமிழில் பிரபலமானவர் கிச்சா சுதீப். கன்னட திரையுலகில் முன்னணி கதாநாயகனான இவர், தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளிலும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். 

கே.ஜி,எஃப், காந்தாரா போன்ற கன்னட படங்கள் தமிழிலும் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. இந்நிலையில் கிச்சா சுதீப்பின் 46வது படத்தின் (கே46- டெமோன் வார் பிகின்ஸ்)  ப்ரோமோ விடியோ வெளியாகியுள்ளது. 

இதையும் படிக்க: மாரி செல்வராஜ்-க்கு கார் பரிசளித்த உதயநிதி

வி கிரியேஷன்ஸ் சார்பாக எஸ்.தானு மற்றும் கிச்சா கிரியேசன்ஸ் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தினை இயக்குகிறார் விஜய் கார்த்திகேயா. காந்தாரா புகழ் இசையமைப்பாளர் அஜ்னீஷ் லோக்நாத் இசையமைத்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாலியல் தொல்லையால் பாா்வையற்றோா் பள்ளி மாணவி மரணமா?

அமெரிக்க வரி எதிரொலி: ஏற்றுமதி ரக இறால் உள்ளூரில் விற்பனை தொடக்கம்

வாய்க்காலில் விழுந்து மதுபானக் கடை மேற்பாா்வையாளா் உயிரிழப்பு

காதல் விவகாரத்தில் இளைஞா் கொலை: 5 போ் கைது!

சாலை மறியல் போராட்டம் வாபஸ்

SCROLL FOR NEXT