ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படப்பிடிப்பு நிறைவு!
ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.
ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சித்தார்த், பாபி சிம்ஹா, கருணாகரன், லட்சுமி மேனன் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 2014ஆம் ஆண்டு வெளியான படம் ஜிகர்தண்டா. விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும், சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பாபி சிம்ஹா பெற்றார்.
இந்தப் படம் வெளியாகி 8 ஆண்டுகளை நிறைவு செய்தைத் தொடர்ந்து இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் விடியோ வெளியிட்டு ஜிகர்தண்டா படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளதை தெரிவித்தார். பின்னர் படத்தின் டீசரை படக்குழு சமீபத்தில் வெளியிட்டது. எஸ்.ஜே.சூர்யா, ராகவா லாரன்ஸ் வித்தியாசமான தோற்றத்தில் இருந்தனர்.
Advertisement
Advertisement
இசை - சந்தோஷ் நாராயணன். ஒளிப்பதிவு - எஸ். திருநாவுக்கரசு. சண்டைப் பயிற்சி- திலிப் சுப்பராயன்.
இந்நிலையில், வேகமாக நடைபெற்று வந்த ஜிகர்தண்டா டபுள் எக்ஸின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழு விடியோ வெளியிட்டுத் தெரிவித்துள்ளது. மேலும் இப்படம் தீபாவளிக்கு வெளியாகுமென அறிவித்துள்ளது.
இதையும் படிக்க: சலார் படத்தின் டீசர் குறித்த அப்டேட்!
ஏற்கெனவே தனுஷின் கேப்டன்மில்லர், சிவகார்த்திகேயனின் அயலான் திரைப்படங்கள் தீபாவளிக்கு வெளியாகும் என கூறப்படும் நிலையில், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படமும் தீபாவளிக்கு வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.