முகப்பு
செய்திகள்

மாமன்னன் ரணங்களாலும் வலிகளாலும் காணப்பெற்ற பெருங்கனவு: இயக்குநர் லெனின் பாரதி பாராட்டு! 

இயக்குநர் லெனின் பாரதி மாமன்னன் படத்தினை பாராட்டி பேசியுள்ளார். 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 7:16 PM
பகிர்:

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு நடித்த மாமன்னன் திரைப்படம் கடந்த வியாழக்கிழமை திரையரங்குகளில் வெளியானது. உதயநிதி ஸ்டாலினின் கடைசிப் படம் என்பதால் அவருடைய ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. 

குறிப்பாக, தமிழகத்தில் பொன்னியின் செல்வன் - 1 படத்திற்கு முதல்நாளில் விற்பனையான டிக்கெட்களை விட அதிக டிக்கெட்கள் மாமன்னனுக்கு விற்பனையானதாக தகவல் வெளியாகி சினிமா வட்டாரத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. 

படத்தின் வெற்றி உறுதியானதால் உதயநிதி, மாரி செல்வராஜ், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் ஏ.ஆர்.ரஹ்மானை சந்தித்து கேக் வெட்டி தங்கள் மகிழ்ச்சியைக் கொண்டாடினர். உதயநிதி சார்பாக இயக்குநர் மாரி செல்வராஜுகு கார் பரிசளிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. 

இயக்குநர்கள் பலரும் படத்தினை பாராட்டி வரும் நிலையில் மேற்கு தொடர்சி மலை இயக்குநர் லெனின் பாரதி கூறியதாவது: 

மாமன்னன்.. ரணங்களாலும் வலிகளாலும் காணப்பெற்ற பெருங்கனவு. நிஜத்தில் ஓங்கிய கையோ, துளிர்த்த இலைகளோ, உதித்த சூரியனோ, மலரா மலரோ… இவைகளின் ஓட்டரசியல் வேட்டையில் சிந்திச் சிதறும் இரத்தம் தோய்ந்த மிச்சம் மீதிப் பருக்கைகள் மட்டும் தான் பாட்டாளி வர்க்க, பட்டியலின பழங்குடி மக்களுக்கு... 

முழு கட்டுரையைப் படிக்க →