செய்திகள்

தனுஷ் - 50 புதிய அப்டேட்

நடிகர் தனுஷின் 50-வது படம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

DIN

தனுஷ் நடிப்பில் வெளியான ‘வாத்தி’ திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்ற நிலையில், தற்போது இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ‘கேப்டன் மில்லர்’ படத்தில் தனுஷ் நடித்து வருகிறார். இந்தப் படம் தீபாவளியை முன்னிட்டு திரைக்கு வரவுள்ளது.

இதனைத் தொடர்ந்து, தன் 50-வது படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனுஷ் இயக்கவுள்ளார். சில நாள்களுக்கு முன்பு இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.

இந்தப் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக துஷரா விஜயனும், சகோதரர்களாக எஸ்.ஜே.சூர்யா, சுதிப் கிஷன் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தது.

மேலும், வடசென்னையை மையமாக கொண்டு உருவாகும் இப்படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், இப்படத்தின் பூஜை நாளை(ஜூலை - 5) நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நீண்ட தலைமுடியுடன் இருந்த தனுஷும் இப்படத்திற்காக மொட்டை அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

‘நிலைத்த வளா்ச்சிக்கு நவீன தொழில்நுட்பம் அவசியம்’

மாசத்துக்கு ஒரு முறை வெளியே வருபவர்கள் அல்ல நாங்கள்! - உதயநிதி ஸ்டாலின்

பந்துவீச்சில் அசத்தல்; பேட்டிங்கில் சொதப்பல்! இந்தியாவிடம் போராடி வீழ்ந்த அமெரிக்கா!!

என்.ஆா்.காங்கிரஸ் 16-ஆம் ஆண்டு தொடக்க விழா

பாஜகவின் கிளைச் செயலாளர் இபிஎஸ்! - முதல்வர் ஸ்டாலின்

SCROLL FOR NEXT