செய்திகள்

சலார் - அதிகாலையில் வெளியாகும் டீசர்.. என்ன காரணம்?

நடிகர் பிரபாஸ் நடித்துள்ள சலார் படத்தின் டீசர் குறித்த காரணங்கள் வெளியாகியுள்ளது.

DIN

இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடிகர் யஷ் நடிப்பில் உருவான கேஜிஎஃப் திரைப்படம் வசூலில் புதிய சாதனையை அடைந்ததுடன் வெளியான நாளிலிருந்து தற்போது வரை அந்த படத்தின் பிரமாண்டம் குறித்து பலரும் பாராட்டி பேசி வருகின்றனர். இந்திய அளவில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதுடன் ரூ.1,200 கோடி வசூலையும் அடைந்தது.

அதனைத் தொடர்ந்து, இயக்குநர் பிரஷாந்த் நீல் தற்போது நடிகர்  பிரபாஸை நாயகனாக வைத்து ‘சலார்’ படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் ஸ்ருதி ஹாசன் நாயகியாக நடிக்கிறார். பிரித்விராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 

சலார் திரைப்படம்  வரும் செப்டம்பர் 28 ஆம் தேதி திரைக்கு வரும் என அப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஹொம்பலே ஃபிலிம்ஸ் அறிவித்திருந்தது.  

மேலும், இப்படத்தின் டீசர் ஜூலை 6 ஆம் தேதி காலை 5.12 மணிக்கு வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.

இந்நிலையில், எதற்காக அதிகாலையில் டீசரை வெளியிடுகிறார்கள் என ரசிகர்கள் கேள்விகளை எழுப்பியுள்ளனர். சிலர் நல்ல நேரம் என்றும் சிலர் வித்தியாசமாக எதாவது செய்ய வேண்டும் என்பதற்காகத்தான் என்றும் கருத்துக்களைப் பகிர்ந்து வரும் நிலையில், ஒரு முக்கிய காரணம் ஒன்று இணையத்தில் உலா வருகிறது.

அதாவது, கேஜிஎஃப் 2 கிளைமேக்ஸ் காட்சியில் ராக்கி கப்பலைச் செலுத்திக்கொண்டிருக்கும்போது அவருக்கு அருகிலிருக்கும் கடிகாரத்தில் அதிகாலை 5 மணி என குறிப்பிடும்படி காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. இதனால், சலாருக்கும் கேஜிஎப்க்கும் தொடர்பு இருக்க வாய்ப்பு இருப்பதாக ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கடைசி டி20: திலக் வர்மா, பாண்டியா அதிரடியால் தென்னாப்பிரிக்காவுக்கு 232 ரன்கள் இலக்கு

SIR: தமிழகத்தில் 97.37 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் | செய்திகள்: சில வரிகளில் | 19.12.25

சென்னை திரைப்பட விழா: பறந்து போ, டூரிஸ்ட் ஃபேமிலி படங்களுக்கு விருது!

செவிலியர்களுக்குக் கொடுத்த தேர்தல் வாக்குறுதியை திமுக நிறைவேற்ற வேண்டும்: அண்ணாமலை

புதிய மெட்ரோ ரயில் திட்டங்களை மத்திய அரசு அனுமதிக்க வேண்டும்! ஆந்திர முதல்வர் வலியுறுத்தல்!

SCROLL FOR NEXT