செய்திகள்

கனவை சாத்தியப்படுத்தியதற்கு நன்றி ரஞ்சித்: விக்ரம்

தங்கலான் படத்திற்காக இயக்குநர் பா.ரஞ்சித்துக்கு நன்றி தெரிவித்துள்ளார் நடிகர் விக்ரம்.

DIN

பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துவரும் தங்கலான் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இந்த படத்தில் நடிகர் பசுபதி,  மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 

கோலார் தங்க சுரங்கத்தில் தமிழர்கள் பட்ட துயரத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்படும் படம் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

நடிகை பார்வதிக்கான காட்சிகள் எடுத்து முடிக்கப்பட்டுள்ளதாக சமீபத்தில் செய்தி வெளியானது. இந்நிலையில் படக்குழு படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக அறிவித்துள்ளது. 

நடிகர் விக்ரம் தன் டிவிட்டர் பக்கத்தில், “அற்புதமான மனிதர்களுடன் 118 நாள்கள் பணியாற்றியது சட்டென ஓடிவிட்டது. ஒரு நடிகராக உற்சாகமான அனுபவங்களைப் பெற்றேன். என்ன ஒரு பயணம்.. இந்தக் கனவை ஒவ்வொரு நாளும் சாத்தியப்படுத்தியதற்கு நன்றி ரஞ்சித்” என நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நல்ல நாள் இன்று!

திருச்செந்தூரில் குழாய் உடைந்து வீணாகும் குடிநீா்

கிராவல் மண் திருடியவா் கைது

தொழிலாளியைத் தாக்கியதாக இருவா் மீது வழக்கு

கோயில் திருவிழா விவகாரம்: கிராம மக்கள் தா்னா

SCROLL FOR NEXT