செய்திகள்

தமிழ் சினிமாவில் கவனம் செலுத்தும் சுனில்

பிரபல தெலுங்கு நடிகர் சுனில் தமிழ்ப் படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார்.

DIN

தெலுங்கில் பிரபல நகைச்சுவை நடிகராக இருந்தவர் சுனில். பின், 2010 ஆம் ஆண்டு ராஜமௌலி இயக்கத்தில் 'மரியாத ராமண்ணா' என்கிற படத்தில் நாயகனாக நடித்த சுனிலுக்கு பட வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்தது. சில ஆண்டுகளுக்குப் பின் ‘புஷ்பா’ படத்தில் வில்லனாக நடித்து அனைவரையும் கவர்ந்திருந்தார். 

புஷ்பா வெற்றிக்குப் பின் அவருக்கு வில்லனாக, குணச்சித்திர நடிகராக அதிக வாய்ப்புகள் வருகிறது. குறிப்பாக, தமிழில் அவர் நடிப்பில் உருவான ‘மாவீரன்’ அடுத்த வாரமும் ‘ஜெயிலர்’, ’மார்க் ஆண்டனி’, ‘ஜப்பான்’ ஆகிய படங்கள் அடுத்தடுத்த மாதங்களிலும் வெளியாகின்றன.

இதையும் படிக்க: ஜவான் டிரைலர் தயார்!

தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கும் சுனில் தமிழ் சினிமாவிலும் கவனத்தை செலுத்துவது சினிமா வட்டாரத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நடிகை ரஷ்மிகாவை மணந்தார் விஜய் தேவரகொண்டா!

அடுத்த 2 மணிநேரத்துக்கு 10 மாவட்டங்களில் மழை

இந்தியா - இஸ்ரேல் இடையே விரைவில் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்!

இந்த வார ஓடிடி படங்கள்!

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 1 காசு குறைந்து ரூ. 90.92 ஆக நிறைவு!

SCROLL FOR NEXT