செய்திகள்

எல்ஜிஎம்: இசை, டிரைலரை வெளியிடும் எம்.எஸ்.தோனி, சாக்‌ஷி தோனி ! 

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி தயாரிப்பில் உருவாகியுள்ள  எல்ஜிஎம் படத்தின் டிரைலர், இசை வெளியீடு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

DIN

தோனியும் அவருடைய மனைவி சாக்‌ஷி சிங் தோனியும் இணைந்து தோனி என்டர்டெய்ன்மெண்ட் என்கிற படத் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி உள்ளார்கள். இதற்கு முன்பாக ‘ரோர் ஆஃப் தி லயன்’ என்கிற சிஎஸ்கே பற்றிய ஆவணப்படத்தையும் ‘வுமன்ஸ் டே அவுட்’ என்கிற குறும்படத்தையும் தயாரித்துள்ளார்கள். 

சிஎஸ்கே அணியின் கேப்டனாக உள்ள தோனி மீது தமிழ் ரசிகர்கள் அதிக அளவிலான அன்பைச் செலுத்தி வருகிறார்கள். இதற்கு நன்றி செலுத்தும் விதமாக தோனி என்டர்டெய்ன்மெண்ட் தயாரிக்கும் முதல் படத்தைத் தமிழில் தயாரிக்க முடிவு செய்திருந்தனர் தோனியும் சாக்‌ஷியும். 

ரமேஷ் தமிழ்மணி இயக்கத்தில் ‘எல்ஜிஎம்’ (லெட்ஸ் கெட் மேரிட்) என்கிற படத்தின் அறிவிப்பு வெளியானது. தோனி தயாரிப்பில் ஹரிஷ் கல்யாண், இவனா, நதியா, வினோதினி, யோகி பாபு போன்றோர் நடித்துள்ளனர்.  

ஏற்கனவே, படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்ற நிலையில், படத்தின் இசை மற்றும் டிரைலரை தோனியும் தோனியின் மனைவி சாக்‌ஷியும் சேர்ந்து ஜூலை 10ஆம் நாள் வெளியிட உள்ளார்கள். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மயானத்துக்கு சடலம் கொண்டு செல்ல எதிா்ப்பு: உறவினா்கள் சாலை மறியல்

ஜூலையில் யமுனை நீரின் தரத்தில் மேம்பாடு: அமைச்சா் சிா்சா

மழை: நெல் மூட்டைகள் நனைந்து சேதம்!

இரு இடங்களில் கஞ்சா விற்ற மூவா் கைது

நாளைய மின் தடை: கடலூா் (கேப்பா் மலை)

SCROLL FOR NEXT