செய்திகள்

முதல் டெஸ்ட் போட்டி சென்னை...முதல் படமும் இங்குதான்: தோனி நெகிழ்ச்சியான பேச்சு!

எல்ஜிஎம் படத்தின் இசை, டிரைலர் வெளியீட்டு விழாவில் தோனி நெகிழ்ச்சியாக பேசியுள்ளார். 

DIN

தோனியும் அவருடைய மனைவி சாக்‌ஷி சிங் தோனியும் இணைந்து தோனி என்டர்டெய்ன்மெண்ட் என்கிற படத் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி உள்ளார்கள்.

சிஎஸ்கே அணியின் கேப்டனாக உள்ள தோனி மீது தமிழ் ரசிகர்கள் அதிக அளவிலான அன்பைச் செலுத்தி வருகிறார்கள். இதற்கு நன்றி செலுத்தும் விதமாக தோனி என்டர்டெய்ன்மெண்ட் தயாரிக்கும் முதல் படத்தைத் தமிழில் தயாரிக்க முடிவு செய்திருந்தனர் தோனியும் சாக்‌ஷியும். 

ரமேஷ் தமிழ்மணி இயக்கத்தில் ‘எல்ஜிஎம்’ (லெட்ஸ் கெட் மேரிட்) என்கிற படத்தின் அறிவிப்பு வெளியானது. தோனி தயாரிப்பில் ஹரிஷ் கல்யாண், இவானா, நதியா, வினோதினி, யோகி பாபு போன்றோர் நடித்துள்ளனர்.  

இன்று சென்னையில் படத்தின் இசை, டிரைலரை வெளியிட்டு தோனி பேசியதாவது: 

எனது முதல் டெஸ்ட் போட்டி (2005)சென்னையில்தான் துவங்கியது. எனது அதிகபட்ச டெஸ்ட் (224) ரன்களும் சென்னையில்தான். தற்போது எனது முதல் படமும் தமிழில்தான். சென்னை எனக்கு எப்போதும் சிறப்பானது. ஐபிஎல் தொடங்கியப் பிறகு நான் தமிழநாட்டு மக்களால் தத்தெடுக்கப்பட்டேன். நமது எல்லோரது வீட்டிலும் மனைவிகள்தான் எஜமான். 

ஹரிஷ் கல்யாண் மனைவிக்கும் அம்மாவிற்கும் இடையே சாண்ட்விச் போல சிக்கிக் கொண்டு இருப்பதுதான் படம். படம் நன்றாக வந்துள்ளது. அனைவருக்கும் பிடிக்குமென நம்புகிறேன். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

துறையூா் பகுதியில் நாளை(ஆக.4) மின் தடை

மணப்பாக்கம் சின்ன கன்னியம்மன் கோயில் ஆடி தீமிதி விழா

முசிறி அருகே குடிநீா் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்

ஆக. 7-இல் ஆதிசக்தி முத்துமாரியம்மன் கோயில் முப்பெரும் விழா

முசிறியில் காரில் வெளி மாநில மதுபாட்டில் கொண்டு சென்றவா் கைது

SCROLL FOR NEXT