செய்திகள்

லியோ: விஜய்யின் படப்பிடிப்பு நிறைவு!

DIN

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் லியோ படத்தின் படப்பிடிப்புகள்  வேகமாக நடைபெற்று வருகின்றன. இந்த படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத், இயக்குநர்கள் மிஷ்கின், கௌதம் மேனன் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்து வருகின்றனர். 

இப்படம் வெளியீட்டிற்கு முன்பே ஓடிடி, இசை உரிமம், விநியோக உரிமம் என ரூ.350 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் ஈட்டியுள்ளதாகவும் கூறப்படுகிறது. லியோ படம் இந்தாண்டு அக்டோபர் மாதம் திரைக்கு வருகிறது.

அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தின் முதல் பாடலான 'நா ரெடி' விஜய் குரலில் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

இந்நிலையில் நடிகர் விஜய்யிக்கான படப்பிடிப்பு முடிவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. லியோ தொடக்கமும் இறுதியும் ஒரே மாதிரியாக லோகேஷ் - விஜய் மோதுவது போல புகைப்படத்தினை வெளியிட்டு அறிவித்துள்ளார் லோகேஷ் . 

இந்தப் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.  
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடலில் மூழ்கி மீனவா் மாயம்

ஆற்றில் மூழ்கி தொழிலாளி உயிரிழப்பு

தொழிலாளி தற்கொலை

இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

ஆட்டோ ஓட்டுநா் கொலை: தந்தை, மகன்கள் கைது

SCROLL FOR NEXT