செய்திகள்

அநீதி படத்தின் டீசர் இன்று மாலை வெளியீடு!

வசந்தபாலன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அநீதி’ திரைப்படத்தின் டீசர் இன்று மாலை வெளியிடப்படவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

DIN

வசந்தபாலன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அநீதி’ திரைப்படத்தின் டீசர் இன்று மாலை வெளியிடப்படவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

வசந்தபாலன் இயக்கத்தில் கைதி, மாஸ்டர் படத்தில் நடித்த அர்ஜுன் தாஸ், அநீதி படத்தின் கதாநாயகனாக நடித்துள்ளார். கதாநாயகி - துஷாரா விஜயன். வனிதா விஜயகுமார், நாடோடிகள் பரணி, சுரேஷ் சக்ரவர்த்தி, அறந்தாங்கி நிஷா, காளி வெங்கட் போன்றோர் நடித்துள்ளார்கள். ஒளிப்பதிவு: எட்வின் சகாய். 

ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படத்தில், மறைந்த கவிஞர் நா. முத்துக்குமாரின் நட்பின் நினைவாக அவருடைய கவிதைகளிலிருந்து வரிகளைத் தொகுத்து ஒரு பாடலுக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஜிவி பிரகாஷ் அப்பாடலைப் பாடியுள்ளார். 

ஏற்கெனவே இந்தப் படம் வருகிற ஜூலை 21-ஆம் தேதி திரையில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று மாலை 6 மணிக்கு படத்தின் டீசர் வெளியாகவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஷ்ரேயாஸ் உடல்நிலை சீராக உள்ளது, ஆனால்...: சூர்ய குமார் விளக்கம்!

காக்கிநாடா துறைமுகத்தில் 8ஆம் எண் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றம்! இதன் அர்த்தம் என்ன?

முதல்வர் தலைமையில் தொடங்கிய திமுக பயிற்சி கூட்டம்!

நலமுடன் ஷ்ரேயஸ் ஐயர் - சூர்யகுமார் யாதவ்!

சவரனுக்கு ரூ.1,200 குறைந்த தங்கம் விலை!

SCROLL FOR NEXT